மன்னார் அரச,தனியார் பேரூந்து தரிப்பிடங்களில் மாலை நேரங்களில் பயணிகளின் அவல நிலை

மன்னார் அரச மற்றும்,தனியார் பேரூந்து தரிப்பிடங்களினுள் முச்சக்கர வண்டிகள் உற்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மன்னார் பொலிஸார் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு பல முறை அறிவித்துள்ளதோடு மன்னார் நகர சபை முச்சக்கர வண்டிகள் உள்லே செல்லத்தடை என விளம்பரப்பலரைகயும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் ஓரளவு கட்டுப்பாடுகளுடன் தமது சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாலை 6 மணிக்குப்பின் பல முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் அரச , தனியார் பேரூந்து தரிப்பிடங்களினுள் அத்தூமீறி நுழைகின்றனர்.
தூர இடங்களில் இருந்து தரிப்பிடங்களை வந்தடையும் அரச தனியார் பேரூந்துகளை முச்சக்கர வண்டிகள் சுற்று சூழ்ந்து கொள்ளுகின்றது.
இதனால் பயணிகள் தமது பயண உடமைகளுடன் பேரூந்தை விட்டு கிலே இரங்க முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் பயணிகளுக்கும்,முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
அருகில் உள்ள வீடுகளுக்கு தாம் நடந்து செல்லுகின்ற போது தம்மை பலவந்தப்படுத்தி முச்சக்கர வண்டியில் ஏற்றிச் செல்ல முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே மன்னார் அரச மற்றும் தனியார் பேரூந்து சங்கத்தினர் துரித நடவடிக்கையினை மேற்கொண்டு முச்சக்கர வண்டிகளை தரிப்பிடங்களினுள் செல்ல அனுமதிக்க வேண்டாம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவரிடம் பல தடவை முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை எனவும் மீண்டும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சிலரின் அட்டகாசம் அதிகரித்தள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தில் பதில் இருந்து சேவைகளை மேற்கொண்டு வரும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சிலர் சாரதி அனுமதிப்பத்திரம்,வாகன அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில் குறித்த முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மன்னார் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் அரச,தனியார் பேரூந்து தரிப்பிடங்களில் மாலை நேரங்களில் பயணிகளின் அவல நிலை
Reviewed by Admin
on
November 26, 2012
Rating:

No comments:
Post a Comment