அண்மைய செய்திகள்

recent
-

பணத்துக்காகவே மைத்துனர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் – செல்வம் எம்.பி. தகவல்-சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது

பணம் பெறுவதை நோக்கமாகக் கொண்டே தமது மைத்துனர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சற்றுமுன் தெரிவித்தார்.

 
கொழும்பு கொட்டாஞ்சேனையிலிருந்து செட்டியார் தெருவுக்கு தொழிலுக்காகச் சென்ற செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.யின் மைத்துனர் சின்னத்துரை இந்திரேஸ்வரன் கடந்த 30 ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் நானு ஓய பங்களாவத்தை பகுதியிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், “பணத்தை நோக்கமாகக் கொண்டே எனது மைத்துனர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனைப் படுகொலை என்றே சொல்ல வேண்டும். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
 
சின்னத்துரை இந்திரேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புறக்கோட்டை பகுதியில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

சின்னத்துரை இந்திரேஸ்வரன் நகை வியாபாரத்துக்காக 30 இலட்சம் ரூபாவுடன் சந்தேக நபரோடு சென்றதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பணத்தை நோக்கமாகக் கொண்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பணத்துக்காகவே மைத்துனர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் – செல்வம் எம்.பி. தகவல்-சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது Reviewed by Admin on November 03, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.