மன்னார் மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் 1கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வரட்சியின் போது விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாய நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் மன்னார் மாவட்ட விவசாயத்தேவைகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்தார்.
வரட்சியினால் பாதிக்கப்பட்ட மற்றும் மீள் குடியமர்ந்த விவசாயிகள் விவசாய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அவர்கள் நீரை பெற்றுக்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். விவசாய நடவடிக்கைகளின் போது பயன்படுத்துகின்ற குளம்,நீர்த்தேக்கம்,குழாய் கிணறுகள் போன்றவற்றை மீள் நிர்மாணம் செய்வதற்காக குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதே சமயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறித்த நிதியில் இருந்து உலர் உணவுகளும் வழங்கப்படவுள்ளதோடு பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் மேலும் தெரிவித்தார்.
வரட்சியினால் பாதிக்கப்பட்ட மற்றும் மீள் குடியமர்ந்த விவசாயிகள் விவசாய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அவர்கள் நீரை பெற்றுக்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். விவசாய நடவடிக்கைகளின் போது பயன்படுத்துகின்ற குளம்,நீர்த்தேக்கம்,குழாய் கிணறுகள் போன்றவற்றை மீள் நிர்மாணம் செய்வதற்காக குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதே சமயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறித்த நிதியில் இருந்து உலர் உணவுகளும் வழங்கப்படவுள்ளதோடு பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் 1கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
Reviewed by NEWMANNAR
on
November 04, 2012
Rating:
No comments:
Post a Comment