தேவன் பிட்டி கடலில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட அட்டை வளர்ப்பு பண்னையினை கிராம மக்கள் உடைத்து அகற்றல்.-பட இணைப்பு.,
மன்னார் தேவன்பிட்டி கிராமத்தில் உள்ள கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட அட்டை வளர்ப்பு பண்ணையினை உடனடியாக அகற்றக்கோரி அக்கிராம மக்கள் பல நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு நேற்று புதன் கிழமை (07-11-2012) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு,ஆண்கள் பெண்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கடலினுள் சென்று சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட அட்டை வளர்ப்பு பண்ணையினை உடைத்து நொருக்கிய சம்பவம் நேற்று புதன் கிழமை மதியம் இடம் பெற்றுள்ளது.
-இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,,,
-நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் போது தேவன் பிட்டி கிராம மக்களும் இடம் பெயர்ந்து சென்ற நிலையில் இந்த மக்கள் யுத்தம் முடிவடைந்த நிலையில் மீண்டும் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த கிராம மக்கள் தமது தொழிலாள கடற்தொழிலையே மேற்கொண்டு வந்தனர்.
அட்டை,நண்டு,மீன் போன்றவற்றை கடற்கரையில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவிலேயே மேற்கொண்டு வந்தனர்.குடும்பப்பெண்களும் குறித்த பகுதியில் அட்டை பிடித்து தொழிலில் ஈடு பட்டு வந்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் ஒருவரின் மாமா முறையிலான தென் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இக்கிராமத்தில் உள்ள எந்த அமைப்புக்களின் அனுமதியும் இன்றி அரச அதிகாரிகளின் உதவியுடன் தேவன் பிட்டி கடற்கரையில் இருந்து சுமார் 250 மீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் 10 ஏக்கர் கடற்பகுதியை பிடித்து அட்டை வளர்ப்பு பண்னையாக மாற்றி சுற்றிவர பாதுகாப்பு வேளிகளும் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் தேவன் பிட்டி கிராமத்தில் உள்ள 221 குடும்பங்களில் 200 குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.ஏனைய 21 குடும்பங்கலே அரசியல் ரீதியில் அவர்களுக்கு ஆதரவு வழங்கி வந்ததோடு குறித்த 21 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் குறித்த பண்ணைக்குச் சென்று நாள் கூழிக்கு வேலை செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த 200 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கும் 21 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இடையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதோடு இரு குழுக்களுக்கும் ஒரே கிராமத்தில் ஒற்றுமையின்மை ஏற்பட்டிருந்தது.
கடந்த மே மாதம் முதல் இடம் பெற்று வந்த குறித்த அட்டை வளர்ப்பு பண்னை தொடர்பான பிரச்சினை தொடர்பில் அதற்கு எதிர்ப்புத்தெரிவித்த அந்த 200 குடும்ப மக்களும் கையோப்பமிட்ட கடிதங்களை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர்;,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,கடல் தொழில் அமைச்சு,கடற் தொழிலில் திணைக்களம் ஆகியவற்றிற்கு ஒன்றிற்கு பல தடவை அனுப்பி இப்பிரச்சினையினை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இது வரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த குறித்த கிராம மக்கள் கடந்த 2 தடவை தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய போதும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ் கந்த குமார் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்று விடுகின்ற நிலையில் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ள வில்லை என அந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று புதன் கிழமை(7-11-2012) காலை 11.30 மணியளவில் தேவன் பிட்டி கடற்கரைப்பகுதியில் ஒன்று சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு குறித்த அட்டை வளர்ப்பு பண்னைக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு கடலுக்குள் செல்ல முற்பட்ட போது கடற்கரையில் நின்ற கடற்படையினருக்கும்,அந்த மக்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடற்படையினரின் எதிர்ப்பையும் மீறி பல நூற்றுக்கணக்கான ஆண்களும்,பெண்களும் கடலுக்குள் சென்று 250 மீற்றர் தொலைவில் பல இலட்சம் ரூபாய் செலவில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட குறித்த அட்டை வளர்ப்பு பண்னையினை உடைத்து அகற்றினர்.
இந்த நிலையில் கோபமடைந்த கடற்படை சிப்பாயிகள் சிலர் கடலுக்குல் சென்று அங்கு நின்ற பெண்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.இதன் பொது ஆண்,பெண் என 5 பேர் கடற்படையினரது தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.செபமாலை,தேவன்பிட்டி பங்குத்தந்தை ஏ.றொக்சன் குரூஸ்,அடம்பன் பங்குத்தந்தை லக்கோன்ஸ்,அருட்சகோதரர் லோரன்ஸ் ஆகியோர் சம்பவ்சென்று மக்களுடன் கலந்துரையாடினர்.
பின் கடற்படைஅதிகாரிகள் அங்கு வந்து குறித்த அருட்தந்தையர்களிடம் வேண்டுகொளினை விடுத்ததினை தொடர்ந்து கடலினுள் சென்ற மக்களை அருட்தந்தையர்கள் வெளியில் அழைத்தனர்.
பின் இராணுவம் மற்றும் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உற்பட பலர் வந்து மக்களுடன் கலந்துரையாடிய நிலையில் மக்களை அவ்விடத்தை விட்டுச் செல்லுமாறு கோரிக்கை விடப்பட்ட போதும் உரிய தீர்வு கிடைக்காது விட்டால் அவ்விடத்தை விட்டுசசெல்ல மாட்டோம் என மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மதியம் 12.30 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளருக்கு தகவல் வழங்கப்பட்டது.இந்த நிலையில் கடும் மழையும் பெய்யத்தொடங்கியது.
இதன் போது அங்கு நின்ற மக்கள் நளைந்த வாறு அங்கு நின்றனர்.மாலை 5.30 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் சிறஸ் கந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்து அருட்தந்தையர்களிடமும்,மக்களி டமும் கதைத்தார்.
எனினும் அவருடைய வாக்குருதிகள் பல தொடர்ந்தும் நிரைவேற்றப்படாத நிலையில் ஏமாற்றப்பட்டு வந்த நிலையில் அவருடைய கருத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரை திரும்பிச் செல்ல அனுமதிக்காததோடு வீதிக்கு முன் அமர்ந்து கொண்டனர்.
பின் நீண்ட நோத்தின் பின் மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள்,இராணுவ உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் கலந்துரையாடியதோடு மன்னார் அரசாங்க அதிபர் தற்போது மன்னாரில் இல்லாததன் காரணத்தினால் உடனடி நடவடிக்கை தற்போதைக்கு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் திங்கட்கிழமை ஒரு முக்கிய கலந்துரையாடலை ஏற்பாடு செய்து ஒரு நிரந்தர தீர்வை பெற்றுத்தருவதாகவும்,அது வரை அட்டை வளர்ப்பு பண்னை பணியாளர்கள் எவரையும் கடலுக்குள் இரங்க கடற்படையும்,இராணுவமும் ஒரு போதும் அனுமதிக்காது எனவும் தமது இருதி வாக்குருதியை ஏற்றுக்கொண்டு இவ்விடத்தை விட்டுச் செல்லுமாறு அதிகாரிகள் மக்களிடம் வேண்டு கோல் விடுத்தனர்.
இந்த நிலையில் இரவு 7 மணியளவில் அந்த மக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.
(மன்னார் நிருபர்)
தேவன் பிட்டி கடலில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட அட்டை வளர்ப்பு பண்னையினை கிராம மக்கள் உடைத்து அகற்றல்.-பட இணைப்பு.,
Reviewed by NEWMANNAR
on
November 08, 2012
Rating:

No comments:
Post a Comment