அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச ஒலிம்யாட் போட்டியில் பதக்கம் வென்ற மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவன்

சர்வதேச ரீதியில் நடைபெற்ற 9வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவன் செல்வன் J. யூட் மிதுஷன் பிகிராடோ வெண்கலப்பதக்கம் வென்றார்.


 இலங்கை , இந்தியா, சீனா, இந்தோனேசியா, ஈரான், மலேசியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்ஆபிரிக்கா, கொரியா, தாய்வான் போன்ற நாடுகளுக்கிடையில் சர்வதேச ரீதியில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியின் 9வது சர்வதேசப்போட்டியானது ஒக்டோபர் 29 தொடக்கம் நவம்பர் 1ம் திகதிவரை இந்தியத்தலைநகர் புதுடில்லியில் நடைபெற்றது.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இப் போட்டியில் பங்குபற்றிய செல்வன் மிதுஷன் பிகிராடோ இதில் வெண்கலப்பதக்கம் வென்றார். இவர் மாகாணமட்டத்தில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் வடமாகாணத்தில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவானார்.

தேசிய மட்டப் போட்டியில் 8ம் இடத்தைப் பெற்று சர்வதேச போட்டிக்குத் தெரிவான இவர் சர்வேதேசப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிமுனையைச் சேர்ந்த திரு ஜெனிங்ஸ் பிகிராடோ, அந்தோனிக்கம் ஆகியோரின் மகனான செல்வன் யூட் மிதுஷனை மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் சார்பாக பாராட்டுவதுடன் , இவரின் பெற்றோரான திரு ஜெனிங்ஸ் பிகிராடோ, அந்தோனிக்கம் ஆகியோரையும் பாராட்டுகின்றோம்.

மேலும் இவரை தயார் செய்த ஆசிரியர்களையும் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரிச் சமூகத்தையும் பாராட்டுவதுடன் இவருக்கு ஊக்கமளித்த மன்னார் வலய விஞ்ஞான பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் ஆசிரிய ஆலோசகர் ஆகியோரையும் பாராட்டி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
சர்வதேச ஒலிம்யாட் போட்டியில் பதக்கம் வென்ற மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவன் Reviewed by NEWMANNAR on November 13, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.