வட மாகாண விளையாட்டு வீரர்கள் கௌரவிப்பு 2012
மேற்படி நிகழ்வானது 20.12.2012 யாழ்ப்பாணம் கல்வியியற் கல்லூரி யில் வட மாகாண விளையாட்டுத் துறையால் நடாத்தப்; பெற்றது. இதில் 2012ம் ஆண்டில் தேசிய சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்டம் சற்று ஒதுக்கப்பட்டது போன்ற சில செயற்பாடுகள் காணப்பட்டது வேதனைக்குரியதாகவுள்ளது.
01. கௌரவ விருந்தினர்கள் யாவரும் இருக்கும் போது யாழ்மாவட்டத்தை சேர்ந்த 3ம் 2ம் இடங்களைப்பெற்றவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். ஆனால் தொடர்ச்சியாக கடந்த 14 ஆண்டுகளாக தேசிய ரீதியில் சாதனை படைத்துவரும் அதேவேளை இவ்வருடம் 1ம் இடத்தையும் பெற்ற மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி அணியினர் முக்கிய விருந்தினர்கள் யாவரும் சென்றபின் இறுதியில் அழைக்கப்பட்டார்கள்.
02. யாழ் மாவட்ட அருணோதயா பாடசாலை இவ்வருடம் மெய்வல்லுநர் போட்டியில் தேசிய மட்டத்தில் 8 பதக்கங்களைப் பெற்றதற்கு விசேட பரிசாக 5 லட்சம் ருபாய் வழங்கப்பட்டது. ஆனால் 14 வருடங்களாக தொடர்ச்சியாக தேசிய மட்டத்தில் உதைபந்தாட்டத்தில் சாதனை படைத்து பெருமை தேடித்தரும் இக்கல்லூரிக்கு எவ்வித விசேட பரிசிலும் வழங்கப்படவில்லை.
03. சர்வதேச போட்டியில் பங்குபற்றிய மெய்வல்லுநர் வீரர்களும் வீராங்கனைகளும் பயிற்றுவிப்பாளர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் உதைபந்தாட்டத்திலும் பங்குபற்றியவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். மெய்வல்லுநர் நிகழ்வில் தனி ஒருவருக்கு சென்ற சகல யாழ் மாவட்ட பயிற்றுவிப்பாளர்கள் யாவரும் கௌரவிக்கப்பட வரலாற்றில் முதற்றடவையாக வட மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் இவ்வருடம் இலங்கையின் 19 வயது தேசிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஈரான் சென்ற மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி உடற்கல்வி ஆசிரியரும் இலங்கையிலே பிரபலமான உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளருமாகிய திரு ப.ஞானராஜ் அவர்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்படவில்லை. இது தொடர்பாக முன்னர் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மன்னார் வலய உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளரால் சுட்டிக்காட்டப்பட்டபோது கௌரவிப்பது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் விளையாட்டுத்துறையினால் இது ஒதுக்கப்பட்டது ஒரு திட்டமிட்ட சதியாகவே நாம் கருதுகின்றோம். இது மன்னார் மாவட்டத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம். மன்னார் மாவட்டத்தை இன்னுமேன் ஒதுக்குகிறீர்கள். இனியாவது விளையாட்டை விளையாட்டாக கருதி பரந்து சிந்தித்து எம்மையும் எமது திறமையையும் மதிக்க வேண்டுகின்றோம்.
தயவு செய்து முடிந்தால் விரும்பினால் பிரசுரித்து உதவுங்கள்.
மன்னார் கல்வி விளையாட்டு சமூகம்
வட மாகாண விளையாட்டு வீரர்கள் கௌரவிப்பு 2012
Reviewed by NEWMANNAR
on
December 21, 2012
Rating:

No comments:
Post a Comment