வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முசலி பிரதேச மக்களுக்கு ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் அனுப்பிவைப்பு
மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்களுக்கான முதலாவது தொகுதி உணவுப் பொருட்கள் இன்று மன்னார் தாழ்வுப்பாட்டிலிருந்து கடற்படையின் இயந்திரப்படகுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டென்லி டி மெல் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் ஏற்பட்டுள்ள தற்போதைய வெள்ளப்பெருக்கால் போக்குவரத்துப் பாதைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ள முசலி பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்கவென அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு, டின்மீன், நெத்தலி மற்றும் மருந்துப் பொருட்கள் சிலவும் சிலாவத்துறை கடற்கரையின் ஊடக கொண்டுவரப்பட்டுள்ளன.
அதேவேளை பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களின் மற்றுமொரு தொகுதி நாளை புத்தளத்திலிருந்து எடுத்துச் செல்லப்படவுள்ளது. கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணிப்புரைக்கமைய இந்தப் பொருட்களை எடுத்து செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் ஏற்பட்டுள்ள தற்போதைய வெள்ளப்பெருக்கால் போக்குவரத்துப் பாதைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ள முசலி பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்கவென அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு, டின்மீன், நெத்தலி மற்றும் மருந்துப் பொருட்கள் சிலவும் சிலாவத்துறை கடற்கரையின் ஊடக கொண்டுவரப்பட்டுள்ளன.
அதேவேளை பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களின் மற்றுமொரு தொகுதி நாளை புத்தளத்திலிருந்து எடுத்துச் செல்லப்படவுள்ளது. கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணிப்புரைக்கமைய இந்தப் பொருட்களை எடுத்து செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முசலி பிரதேச மக்களுக்கு ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் அனுப்பிவைப்பு
Reviewed by NEWMANNAR
on
December 28, 2012
Rating:

No comments:
Post a Comment