அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அபிவிருத்திப் பணிகளை பாதுகாப்புச் செயலாளர் நேரில் ஆய்வு {பட இணைப்பு}

மன்னார் மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அங்கு இடம்பெற்று வரும் யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டுள்ளார்.
முள்ளிக்குளம் பிரதேசத்திற்கு சென்ற பாதுகாப்புச் செயலாளர், முள்ளிக்குளம் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக கூடு தல் கவனம் செலுத்தியுள்ளார்.
மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் இந்த விஜயத்தின்போது விரிவாக ஆராய்ந்துள்ளார்.
மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அரசாங்க உயர் அதிகாரிகள், வடக்கு- மேற்கு பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரோஹன பெரேரா உட்பட அதிகாரிகளை சந்தித்த பாதுகாப்புச் செயலாளர் அந்தப் பிரதே சத்தின் நிலைமைகள் தொடர்பாக கலந்துரை யாடியுள்ளார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல் கம் ரஞ்சித் ஆண்டகை, மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு இராயப்பு ஜோசப், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொழம்பகே, கடற்படையின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோர் பாதுகாப்புச் செயலாளருடனான இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மன்னாருக்கு சென்ற பாதுகாப்புச் செயலாளரை வரவேற்ற பிராந்திய கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ரோஹன பெரேரா, இந்த பிரதேச மக்களின் வாழ்க்கை நிலைமை, நாளாந்த வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளருக்கு விளக்கமளித்தார். வரட்சி காலத்தில் இந்த பிரதேச மக்களுக்காக கடற்படையினர் முன்னெடுத்த நடவடிக்கைகள், கடற்படையினரால் முள்ளிக்குளம் பிரதேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் தொடர்பாகவும் விளக்கமளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மக்களுக்கு தேவையான வீடுகளை அமைப்பதற்கு பொருத்தமான காணிக¨ளை பெற்றுக் கொடுத்தல், நிரந்தர வீடுகளை நிர்மாணித்தல், உள்ளூர் வீதிகளை அமைத்தல், பொதுக் கட்டிடங்கள் நிர்மாணித்தல் மற்றும் வாழ்வாதார உதவிகள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப் பட்டுள்ளதுடன் இதற்குத் தேவையான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் பாதுகாப்புச் செயலாளர் வழங்கியுள்ளார்.
இந்த பிரதேச மக்களுக்கு அவர்களது சொந்த இடங்களில் வீடுகளை அமைத்து கொடுத்தல் மற்றும் தொழிற் பயிற்சிகள், சுய தொழில் வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் தனது மன்னார் மாவட்ட விஜயத்தின் ஓர் அங்கமாக அந்தப் பிரதேசத்திலுள்ள மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த விஷேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட பொது மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அன்றாட தேவைகள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளருக்கு எடுத்துரை த்தனர்.






மன்னார் அபிவிருத்திப் பணிகளை பாதுகாப்புச் செயலாளர் நேரில் ஆய்வு {பட இணைப்பு} Reviewed by Admin on December 28, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.