பெண்கள்,சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் முகமாக மன்னாரில் விழிப்புனர்வு நிகழ்வு.{படங்கள்}
-மாத்தறையில் இருந்து 30 இளைஞர்,யுவதிகளும்,மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 120 இளைஞர் யுவதிகளும் இணைந்து மன்னார் பஸார் பகுதியில் குறித்த விழிர்ப்புனர்வு நிகழ்வை நடாத்தினால் இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் குறித்த 150 இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார்,நானாட்டான்,முசலி,மாந் தை மேற்கு,மடு அகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து 120 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
-ஆரம்ப நிகழ்வு மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம் பெற்றது.
இதன் போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பி.பூலோகராஜா,மன்னார் நகர இளைஞர் சேவை அதிகாரி ஏ.டியூக் குரூஸ்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி தவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-இதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு முன்பாக குறித்த இளைஞர் யுவதிகள் கலந்து கொண்ட பேரணி ஆரம்பமாக பிரதான வீதிடாக சென்று மன்னார் அரச பஸ் தரிப்பிடத்தை சென்றடைந்தது.
இதன் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பது தொடர்பான பதாதைகளை ஏந்தியவாறு இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டனர்.
பின் குழுக்களாக பிரிக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள்,அரச தனியார் பேருந்துகள்,முச்சக்கர வண்டிகள் ஆகியவற்றில் அதன் உரிமையாளர்களின் அனுமதியுடன் விழிர்ப்புனர்வு ஸ்ரிக்கர் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டது.
மக்களுக்கும் விழிர்ப்புனர்வு ஏ ற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் குறித்த இளைஞர் யுவதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெண்கள்,சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் முகமாக மன்னாரில் விழிப்புனர்வு நிகழ்வு.{படங்கள்}
Reviewed by NEWMANNAR
on
December 18, 2012
Rating:
No comments:
Post a Comment