அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முதல் பொத்துவில் வரை 60-70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்


இலங்கையின் தென் பிராந்திய கடல் பகுதி வளி மண்டலத்தில் குழப்ப நிலை ஏற்பட்டிருப் பதன் விளைவாகவே மப்பும் மந்தாரமும் மிக்க மழைக் காலநிலை காணப்படுவதாக வளி மண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.


இதன் விளைவாக மன்னார் குடா முதல் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் மணித்தியாலத்திற்கு 60- 70 கிலோ மீற்றர்கள் வேகத்தில் காற்று வீசும். அதனால் இப்பிரதேச கடற்பரப்பு இடையிடையே கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். எனினும் கிழக்கு, ஊவா, வடமத்தி மற்றும் மாத்தறை, ஹம் பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.

நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப் படி ஆகக் கூடிய மழை மொன ராகலை மாவட்டத்திலுள்ள உள்கிட்டிய வில் 262.4 மில்லி மீற்றர்கள் வரை பெய்துள்ளது எனவும் அவர் மேலும் கூறினார். நேற்று காலை 8.30 மணியுடன் முடி வுற்ற 24 மணி நேர காலப் பகுதி யில் பதிவான அதிகளவு மழை வீழ்ச்சி விபரம்.

உள்கிட்டிய 262.4 மி. மீ
கிராந்துருகோட்டை 232.6 மி. மீ
உக்குவளை 190. 0 மி. மீ
ரண்டம்பே 175.3 மி. மீ
அம்பாறை 152.0 மி. மீ
கட்டுகஸ்தொட்ட 149.0 மி. மீ
குருநாகல் 145.6 மி. மீ
விக்டோரியா 126.0 மி. மீ
நுவரெலியா 95.3 மி. மீ
மன்னார் முதல் பொத்துவில் வரை 60-70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் Reviewed by NEWMANNAR on December 18, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.