மன்னார் நாகதாழ்வு கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தில் மோசடி!
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மீள் குடியேற்றக்கிராமமான மாந்தை நாகதாழ்வு கிராமத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்திய வீட்டுத்திட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் மோசடிகள் காணப்படுவதாக நாகதாழ்வு புனித தோமையார் விவசாய அமைப்பின் செயலாளர் எஸ்.பொன்னையா தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் நேற்று வியாழக்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்எமது நாகதாழ்வு கிராமத்தில் 46 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர்.அவர்களில் தற்போது 36 குடும்பங்கள் மட்டுமே நிரந்தரமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முதற்கட்டமாக எமது கிராமத்தில் 32 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டனாஇந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட 32 பயணாளிகளில் 4 பயணாளிகளின் வீடுகள் மாத்திரமே அமைப்பதற்காண வேளைகள் இடம் பெற்று வருகின்றது.
ஆனால் 32 வீடுகளும் அமைப்பதற்காண முதற்கட்ட பணிகள் இடம் பெற்று வருவதாக 32 பயணாளிகளது பெயர் பட்டியல்களும் அதிகாரிகளினால் உரிய இடங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் எந்த உண்மையும் இல்லை.கண்துடைப்பிற்காக வெறும் 4 வீடுகள் மாத்திரமே அமைப்பதற்காண வேளைகள் இடம் பெற்று வருகின்றதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் நாகதாழ்வு கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தில் மோசடி!
Reviewed by NEWMANNAR
on
December 01, 2012
Rating:

No comments:
Post a Comment