22 வருடங்களாக அகதி வாழ்வு- சொந்த ஊரில் இருக்க விடுங்கள். மன்னார் பள்ளிமுனை மக்கள் ஜனாதிபதிக்கு மனு

கடந்த திங்கட்கிழமை மனு பள்ளிமுனை புனித லூசியா ஆலயப் பங்கு மேய்ப்புப் பணிசபையில் ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதற்காக மன்னார் மேலதிக அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,,,,
எமது உறவுகளும் ஆதரிக்காவிட்டால் நாங்கள் நடுத்தெருவில் நிற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும். படையினரோ தங்கள் வசதிப்படி எந்த அரச காணியிலும் முகாம் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் நாங்களோ அனுமதி இல்லாமல் எங்கும் வீடு அமைத்து இருக்க முடியாது என்பது தாங்கள் நன்கு அறிந்த விடயம்.
கடந்த 1990 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற போர் காரணமாகப் பள்ளிமுனைக் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து சிலர் மடுவுக்கும்,ஒரு வருடத்தின் பின் ஒருசிலர் இந்தியாவுக்கும் சென்றோம்.
நாம் எங்கள் சொந்த இடத்துக்குத் திரும்பி வந்துள்ள நிலையில் கடற்கரையிலுள்ள எங்களது வீடுகளிலும், மீன் சந்தையிலும் பொலிஸார் நிலைகொண்டிருந்தனர். அவர்களிடமும் எமது வீடுகளை விட்டுத்தரும்படி பல்வேறு தரப்பினரிடம் கடிதங்கள் மூலமாகவும் கேட்டிருந்தும், எமக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை.
அப்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக வீடுகளை ஒப்படைக்க முடியாது என்று கடிதங்கள் மூலமாக எமக்கு எடுத்துக்கூறப்பட்டன. 2009 போர் முடிந்ததிலிருந்து எமது காணிகளை விடுவிக்கக் கோரும் எங்கள் முயற்சிகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன.
2012 மே மாதம் 10 ஆம் திகதி எமது இடங்களில் நிலை கொண்டிருந்த பொலிஸார் வீடுகளைப் பாரம் தருவதாக ஒப்புக்கொண்டனர். ஆனால், அங்கு நிலைகொண்டிருந்த கடற்படையினரோ மறுப்புத் தெரிவித்து எமது வீடுகளைக் கூட பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை.
வேறு இடங்களில் மீள்குடியேற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது நாங்கள் மட்டும் உள்ளூரிலேயே 22 வருடங்களுக்கு மேலாக உறவினர்களின் வீடுகளில் சிரமங்களுக்கு மத்தியில் வேதனையுடன் வாழ்ந்து வருகின்றோம்.
எமக்கு வேறு இடமோ வீடோ எதுவுமில்லாமல் அந்தரித்து நிற்கின்றோம். இந்த நிலையில் எமது உறவுகளும் ஆதரிக்காவிட்டால் நாங்கள் நடுத்தெருவில் நிற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும். படையினரோ தங்கள் வசதிப்படி எந்த அரச காணியிலும் முகாம் அமைத்துக் கொள்ளலாம்.
ஆனால் நாங்களோ அனுமதி இல்லாமல் எங்கும் வீடு அமைத்து இருக்க முடியாது என்பது தாங்கள் நன்கு அறிந்த விடயம்.
ஜனாதிபதியும் பாதுகாப்புப் பிரிவின் தலைமை அதிகாரி என்ற முறையில் தங்களால் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க முடியுமென்ற உறுதியான நம்பிக்கையுடன் தங்களின் மேலான கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டு வருகின்றோம் என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிரதிகள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர்,கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர்,மீள்குடியேற்ற அமைச்சர்,மன்னார் அரச அதிபர், மன்னார் மேலதிக அரசாங்க அதிபர்,மன்னார் பிரதேச செயலாளர், அதிவணக்கத்துக்குரிய மன்னார் ஆயர், மன்னார் கடற்படை அதிகாரி, மன்னார் பொலிஸ் அத்தியட்சகர், பள்ளிமுனை கிராம சேவையாளர்கள்,மன்னார் தேசிய மீனவர் ஒத்துழைப்புப் பேரவை, மன்னார் மனித உரிமைகள் மீறல்களுக்கான சங்கம்,மன்னார் பிரஜைகள் குழு ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
வினோத்
22 வருடங்களாக அகதி வாழ்வு- சொந்த ஊரில் இருக்க விடுங்கள். மன்னார் பள்ளிமுனை மக்கள் ஜனாதிபதிக்கு மனு
Reviewed by NEWMANNAR
on
December 14, 2012
Rating:

No comments:
Post a Comment