அண்மைய செய்திகள்

recent
-

பருப்புக்கடந்தான் குளம் உடைப்பெடுப்பு-போக்குவரத்துக்கள் பாதிப்பு-பட இணைப்பு.,

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பருப்புக்கடந்தான் குளம் பாரிய அளவில் உடைப்பெடுத்துள்ளதன் காரணத்தினால் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் பாரிய அளவில் பாதீப்படைந்த நிலையில் 541 ஆவது படைப்பிரிவு இராணுவத்தின் முயற்சியில் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் தற்போது இடம் பெற்று வருகின்றது.

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் தம்பனைக்குளம் பகுதியில் வீதி வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் மடு பரப்புக்கடந்தான் வீதியூடாக மன்னாருக்கும்,தென்பகுதிக்குமான போக்குவரத்துச் சேவைகள் இடம் பெற்று வந்தது.

-இந்த நிலையில் பருப்புக்கடந்தான் குளம் பாரிய அளவில் உடைப்பெடுத்துள்ளதன் காரணத்தினால் குறித்த வீதியூடான போக்குவரத்து பாரிய அளவில் பாதீப்படைந்திருந்தது.

-இந்த நிலையில் இராணுவத்தின் 541 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிகேட் கொமாண்டர் லந்திரா அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக பருப்புக்கடந்தான் குளம் உடைப்பெடுத்துள்ள பகுதியில் இராணுவத்தினர் விசேட கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

-குறித்த பகுதியில் மண் மூடைகள் அடுக்கப்பட்டு வெள்ள நீர் வருகை சற்று குறைக்கப்பட்ட நிலையில் மக்களின் போக்குவரத்துக்கள் இடம் பெற்று வருகின்றது.தற்போது குறித்த வீதியூடாக மட்டுப்படுத்தப்பட்ட அளவு போக்குவரத்துச் சேவைகள் மாத்திரமே இடம் பெற்று வருகின்றது.

-குறித்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்காண மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.










பருப்புக்கடந்தான் குளம் உடைப்பெடுப்பு-போக்குவரத்துக்கள் பாதிப்பு-பட இணைப்பு., Reviewed by NEWMANNAR on December 29, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.