அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் – நானாட்டான் பிரதேச மக்களின் அவல நிலை.

மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சுமார் 750 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளதுடன் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கும் உள்ளாகிய நிலையில் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.


 நானாட்டான் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த அரச அலுவலர்கள் பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெயர்ந்த மக்களின் நலன்களை கவனிப்பதில் இரவு பகலாக செயல்பட்டு வருகின்றார்கள். நானாட்டன் பிரதேச செயலகத்திறக்கு உட்பட்ட பாடசாலைகள் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடங்கள் பொது நோக்கு மண்டபங்கள் என பதினொரு இடங்களில்,750 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோந்த 2612 பேர், குழந்தைகள், பெண்கள் உட்பட தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

 நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நானாட்டான் மகா வித்தியாலயம் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இராசமடு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடம் முருங்கன் மகா வித்தியாலயம் வங்காலை மகா வித்தியாலயம் பரிகாரிகண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை சூரிய கட்டைக்காடு, றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அரசன்குளம், றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாவிலங்கேணி, றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ரசூல்புதுவெளிகிராம அபிவிருத்தி சங்க கட்டிடம் ,செம்மண்தீவு பொது நோக்குக் கட்டிடம் என்பவற்றில் இந்த மக்கள் தங்க வைககப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு வேண்டிய சமைத்த உணவு வகைகளை பொது அமைப்புகளால் வழங்கப்பட்டு வருகின்றன.

 மேலும் மழை தொடருமாக இருந்தால் வெள்ளத்தினால் இடம் பெயரும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது என அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இதே வேளை நானாட்டன் பிரதேசத்தில் உள்ள ஆறு குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. இதன் காரணமாக இந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளார்கள். கடந்த காலங்களில் இக்குளங்கள் உரிய முறையில் சீர் செய்ய நடவடிக்கைகள் மேற்க் கொள்ளப்படாமையால் இத்தகை சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றார்கள். குளங்கள் பெருக்கெடுத்தமையால் பயிர்களும் பெரும் அழிவுக்கு உள்ளாகியுள்ளது.

 மேலும் பல குளங்கள் நிரம்பிய நிலையில் காணப்படுகின்ற போதிலும் இந்தக் குளங்கள் உடைப்பெடுக்குமானால் பாரிய துன்பத்திற்க்கு மக்கள் மேலும் உள்ளாக வேண்டிய நிலமை ஏற்படலாம் என பொது அமைப்புகள் தெரிவிக்கின்றன. நானாட்டன் பிரதேசத்தில் வெள்ளத்தினால் இடம் பெயர்ந்து பாடசாலைகள் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்கள் சிறுவர்களுக்கான அடிப்படைத்தேவைகள் சில பற்றாக்குறையாக காணப்படுவதாக முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

 பெண்களுக்கான உடைகள் மற்றும் சிறுவர்கள் முதியவர்களுக்கான பால் மா வகைகள் பெரும் தட்டுப்பாடாக காணப்படுவதாகவும் இதனை உடனடியாக வழங்க உரிய பொது அமைப்பக்கள் நடவடிக்கைகளை மேற்க்கொள்ள முன்வரவேண்டும் எனவும் கோரியுள்ளார்கள்.

 திடீரென அதிகரித்த மழை மற்றும் வெள்ளத்தினால் தாம் உடனடியாக தமது சிறுபிள்ளைகள் மற்றும் பெண்களுக்கு வேண்டிய அத்தியவசியப் பொருட்களைக் கூட எடுத்து வர முடியாத நிலமை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக இத்தகைய பொருட்களின் தேவை காணப்படுவதாகவும் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தெரிவித்துள்ளார்கள
மன்னார் – நானாட்டான் பிரதேச மக்களின் அவல நிலை. Reviewed by NEWMANNAR on December 29, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.