முசலியில் மீனவர்களுக்கு மீன் பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு.
இடம் பெயர்ந்து மீள் குடியேறிய மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீன் பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(2-12-2012) காலை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துரை முஸ்ஸிம் மகா வித்தியாலையத்தில் இடம் பெற்றது.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 350 பயணாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மீன் பிடி படகு,வெளி இணைப்பு இயந்திரம்,வலைத் தொகுதி ஆகியவை 175 மீனவர்களுக்கு தனித்தனியே வழங்கி வைக்கப்பட்டது.குறித்த ஒரு தொகுதி கடற் தொழில் உபகரணங்கள் இருவர் வீதிம் 350 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்விற்கு இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா, கடல் தொழில் மற்றும் நீரியல் வழத்துரை அமைச்சர் ராஜீத சேனாரட்ன,வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஸாட் பதீயுதீன்,வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திர சிறி உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
முசலியில் மீனவர்களுக்கு மீன் பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு.
Reviewed by NEWMANNAR
on
December 03, 2012
Rating:
No comments:
Post a Comment