தலைமன்னாரில் மக்களின் காணிகளை தன்வசப்படுத்தும் வன்னி மாவட்ட அமைச்சர் ஒருவரின் சகோதரன்.
வன்னி மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் அந்தரங்க செயலாளரும்,குறித்த அமைச்சரின் உடன் பிறந்த சகோதரர் முறையிலான ஒருவர் மன்னார் தலைமன்னார் பகுதியில் உள்ள மக்களின் காணிகளை போலி உறுதிகளை வைத்து கணிகளை அபகரித்து வருவதாக தலைமன்னார் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தலைமன்னார் ஸ்ரேஸன் பழைய பாலத்தடி உட்பட தலைமன்னார் பகுதியில் பல ஏக்கர் காணிகளை குறித்த அமைச்சரின் சகோதரர் தன்வசப்படுத்தியுள்ளார்.
குறித்த காணிகளுக்கு உரிமையானவர்கள் அதன் உறுதிப்பத்திரங்களை வைத்துள்ள போதும் குறித்த அமைச்சரின் சகோதரர் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி குறித்த காணிகளுக்கு சுற்று வேலிகளை அடைத்து வருகின்றார்.
தலைமன்னார் பொலிஸார் அமைச்சரின் சகோதரருக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தலைமன்னார் பகுதியில் தமிழ்-முஸ்ஸிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற நிலையில் தமிழ்,முஸ்ஸிம் மக்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் விதத்தில் அமைச்சரின் சகோதரர் செயற்பட்டு வருவதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல வருடங்கள் பழைமை வாய்ந்த குறித்த காணிகளில் பனை மரங்கள் அதிகமாக காணப்படுகின்றது.
அந்த மக்கள் குறித்த பனை மரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்தே தமது வாழ்க்கைச் செலவை நடாத்தி வந்தனர்.
தற்போது பல ஏக்கர் காணிகளுக்கு அமைச்சரின் சகோதரன் மாற்று உறுதிகளை காட்டி காணிகளை தன்வசப்படுத்தி அக்காணிகளுக்கு சுற்று வேலி அடைத்து வருகின்றார்.
புத்தளத்தில் இருந்து சில பணியாளர்களை அழைத்து வந்து குறித்த வேலைகளை மேற்கொண்டு வருகின்றார்.
தற்போது குறித்த காணியில் உள்ள பனை மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகின்றார்.
பனை மரம் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ள போதும் அவர் தலைமன்னார் பொலிஸாரின் ஆதரவுடன் பனை மரங்களை வெட்டி கடத்தி வருகின்றார்.
தற்போது கைப்பற்றியுள்ள மக்களின் காணிகளை கொழும்பில் உள்ள பிரபல வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தலைமன்னார் மக்கள் தெரிவித்துள்ளனர்.
(மன்னார் நிருபர்)
(மன்னார் நிருபர்)
தலைமன்னாரில் மக்களின் காணிகளை தன்வசப்படுத்தும் வன்னி மாவட்ட அமைச்சர் ஒருவரின் சகோதரன்.
Reviewed by NEWMANNAR
on
January 13, 2013
Rating:

1 comment:
Post a Comment