அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தென்பகுதியைச் சேர்ந்த நில அளவையாளர் கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரனை- அச்சத்தில் அப்பகுதி மக்கள்.


மன்னார் பிரதேச நில அளவை அலுவலகத்தில் கடமையாற்றும் தென் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த மாதம் 7 ஆம் திகதி(07-12-2012) இரவு கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மன்னார் பொலிஸாரும்,புலனாய்வுத்துறை  அதிகாரிகளும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

மன்னார் உப்புக்குளம் பிரதான வீதியில் குறித்த மன்னார் பிரதேச நில அளவை அலுவலகம் அமைந்துள்ளது.அதற்கு முன்பாக உள்ள தனியார் ஒருவருடைய வீட்டில் அந்த அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் வாடகைக்கு அமர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த வீட்டில் வாடகைக்கு அமர்ந்திருந்த சக ஊழியர்கள் விடுமுறைக்காக தமது இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் பொலநறுவை பகுதியைச் சேர்ந்த நாமல் சோமரத்தின (வயது-32)என்ற இளைஞரும் மேலும் சில ஊழியர்களும்  குறித்த வீட்டில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில்  சம்பவ தினமான 07-12-2012 வெள்ளிக்கிழமை இரவு   அலுவலக பணி முடிந்த நிலையில் குறித்த ஊழியர் தனது வாடகை வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பின்னர் மறுநாள் சனிக்கிழமை(8-12-2012) காலை அவர் அலுவலகம் செல்லவில்லை.

இந்த நிலையில் மன்னார் பிரதேச நில அளவை அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற அதிகாரி ஒருவர் குறித்த இளைஞர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் காணப்படுவதை கண்டுள்ளார்.ஆனால் அங்கு வேறு எவரும் இருக்கவில்லை.

இந்த நிலையில் முதலில் அவருடன் இருந்த சக பணியாளர்கள் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மன்னார் பொலிஸாரும்,புலனாய்வுத்துறையினரும் கொலைச்சம்பவம் இடம் பெற்ற வீட்டிற்கு அருகாமையில் உள்ள மக்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் உள்ள குடும்பஸ்தர்கள் சிலர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தபப்பட்டு வருகின்றனர்.

தற்போது கொலைச்சம்பவம் இடம் பெற்ற வீடு தொடர்ந்தும் பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளது.
பொலிஸாரின் தொடர் விசாரணைகளினால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் தென்பகுதியைச் சேர்ந்த நில அளவையாளர் கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரனை- அச்சத்தில் அப்பகுதி மக்கள். Reviewed by NEWMANNAR on January 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.