காதல் முகாரி!
விடலைப்பருவத்தை
தாண்டி வரும் பாதையில்
தடக்கி விழுந்தால் காதல்
கை பிடித்து நடக்கும்!
எனக்கும் அப்படித்தான்
காதலில் விழுந்தெழும்பி
மெல்லச்சுதாகரித்துக்கொண்டு
அதிலிருந்து மீண்டவனாய்
புதிய தேசம் தேடி
பயணித்த வேளை
மீண்டும் காதல், பிறந்து
திருமணத்தை தொட்டுக்கொண்டது.
மோகம் முற்பது நாள்
ஆசை அறுபது நாள் கதை போல
என் கதையும் ஆகிநிற்க
இருபது வருடங்கள் ஓடிப்போனது.
மேற்கத்தேய சமுகம்
எதையும் சுமுகமாக முடிவு செய்யும்
இந்த இருபது வருடங்கள்
தேவைப்பட்டிருக்காது ...
எந்தன் சமூகத்தோடு
ஒத்துப்போக என் வலிகளை
எனக்குள்ளேயே அடக்கி
ஆளவேண்டிய தாயிற்று ....
வாழ்வின் விளிம்பில்
நின்றபடி ஒரு முடிவு
மரணமா,விலகிப்போவதா?
சாதகமான முடிவு..தள்ளிப்போகிறேன் .....
காதலின் கீதம் பாடிய-அந்த
நாட்கள் கனாவாய்ப்போக
காலம் இப்போது -என்னை
காதலின் முகாரி பாடவைத்தது ..........
*சந்துரு *
காதல் முகாரி!
Reviewed by NEWMANNAR
on
January 12, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment