வெளிக் கொண்டு வரப்படாத பாடசாலை அதிபரின் செயல்
முஸ்லீம் ஹஸ்முல்லாவ காலேஜ் அதிபரின் சமய ஒழுங்கு முறை மீறல் சம்பந்தமான முறைப்பாடு
கீழே கையொப்பமிட்டுள்ள நாம் முஸ்லீம் ஹஸ்மில்லாவ புனேவா மதவாச்சியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மூன்று பரம்பரை முஸ்லீம் குடும்பங்களைக் கொண்டவர்களாவோம். புனேவாவிலுள்ள முஸ்லீம் ஹஸ்மில்லாவ பாடசாலையில் எமது மூன்று பிள்ளைகள் கல்வி கற்கின்றார்கள்.
இந்தப் பாடசாலை அதிபரின் சமயஒழுங்கு மீறல் சம்பந்தமாக முறையிடுவதையிட்டு நாம் கவலையடைகின்றோம். அவரது பெயர் நாவூர் பிச்சை அஜ்மால் கான் ஆகும். இம் மாதிரியான வெட்கத்துக்குள்ளான இவரது நடத்தையை கௌரவ அமைச்சர்களுக்கு முறையிடுவது எமது கடமையாகும். இல்லையேல் இம்மாதிரியான நடத்தை தொடர்ந்து இடம்பெறலாம்.
பாதிக்கப்பட்ட மாணவிகள்
தரம் 11 xxxxxxxxx
தரம் 10 xxxxxxxxx
தரம் 11 xxxxxxxxxxxxx
கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு முன்பு இம் மூவரும் அதிபரின் அலுவலகத்திற்கு மேசைச் சீலை ஒன்றை எடுக்கச் சென்ற வேளையில் இவர்கள் இந்தத் தொந்தரவுக்குள்ளானார்கள். அவர்களது கழுத்தைப் பார்க்க வேண்டுமென இவ் அதிபர் அவர்களது பர்தாவைக் களையுமாறு வற்புறுத்தியுள்ளார். அவர்களது மறுப்பிலும் அவர்களது கட்டாயப்படுத்தல் நிமித்தம் அவர்களது கழுத்துக்களைக் காண்பிக்க வேண்டியிருந்தது.xxxxxxxxxxxx
இந்த அதிபரின் இந்த நடவடிக்கை இஸ்லாமிய படிப்பினைக்கு மிகவும் பொருந்தாமையால் உடனடியாக விசாரணை ஒன்றை மேற் கொண்டு இந்த அதிபருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு உங்களைத் தயவாக வேண்டிக் கொள்கிறோம்.
இந்த அதிபர் ஒரு இளம் மாணவியை மணம் முடித்தும் அவர் தற்போது புத்தளத்தில் வாழ்கிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி அந்த மனைவி இன்னும் உயிர் வாழ்கிறார். இம் மாதிரியான அதிபர்களினால் எமது பிள்ளைகள் இழிவு படுத்தப்படுவதால் இந்த அதிபருக்கு எதிராக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு உங்களை வேண்டிக்கொள்கிறோம்.
இப்படிக்கு
தங்கள் விசுவாசமுள்ள
1. ஏ.கே.சகீட்
2. நூர்தீன் முஸ்லாமில
3. சுல்தானா துள்சீக்
இக் கடிதம் மத்திய மாகாண கல்வித்திணைக்கள அதிகாரிக்கு அனுப்பபட்டும்,மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அறிவிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறிப்பு
பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளிற்கு இணங்கவே மன்னார் இணையத்தில் இச் செய்தி இணைக்கப்பட்டுள்ளது.(ஆசிரியர்)

Reviewed by NEWMANNAR
on
January 12, 2013
Rating:

No comments:
Post a Comment