அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் இடைத்தங்கள் முகாம்களாக செயற்பட்டு வந்த பாடசாலைகளுக்கு அவசர உதவிகள் வழங்கி வைப்பு.(படங்கள்)


இயற்கை அனர்த்த்தின் போது மன்னார் மாவட்டத்தில் இடம் பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடைத்தங்கள் முகாம்களாக பயண்படுத்தப்பட்ட 10 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அமைச்சர் றிஸாட் பதீயுதீன் அவர்களினால் அடிப்படை வசதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

-மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் வலயக்கல்வி பணிமனையில் இடம் பெற்றது.

இதன் போது அமைச்சர் றிஸாட் பதீயுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குனைஸ் பாரூக் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்கள் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இடைத்தங்கள் முகாம்களாக இயங்கி வந்த 10 பாடசாலைகளுக்கு மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவினால் அத்தியாவசிய உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது அமைச்சர் றிஸாட் பதீயுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் குனைஸ் பாரூக்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர,மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல்,பிரதேச செயலாளர்கள்,வலயக்கல்விப்பனிப்பாளர்கள்,மன்னார் நகர பிதா எஸ்.ஞானப்பிரகாசம், மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ அமைச்சின் மாவட்ட பணிப்பானர் முஹமட் றியாஸ்,அமைச்சரின் இணைப்பாளர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.  





மன்னார் மாவட்டத்தில் இடைத்தங்கள் முகாம்களாக செயற்பட்டு வந்த பாடசாலைகளுக்கு அவசர உதவிகள் வழங்கி வைப்பு.(படங்கள்) Reviewed by NEWMANNAR on January 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.