அண்மைய செய்திகள்

recent
-

குஞ்சுக்குளம் மக்களினால் திருப்பி அனுப்பப்பட்ட உலர் உணவுகள் ஆயரினால் பொறுப்பேற்கப்பட்டு திருப்பி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது-மன்னார் அரச அதிபர்


மல்வத்து ஓயா வெள்ள நீர் பெக்கெடுத்துள்ளதன் காரணத்தினால் மன்னார் மாவட்டம் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் கிரா மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட உலர் உணவுப்பொருட்கள்  போதாiமையினால் அப்பொருட்கள் திருப்பி மாவட்ட செயலகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

 ந்த நிலையில் குஞ்சுக்குள கிராம மக்கள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர அறியத்தருகையில்,,,

குஞ்சுக்குள கிராமமானது எவ்வித வெள்ளத்தினாலும் பாதிக்கப்படாத கிராமம் என்பதுடன் சுற்று நிருபத்தின் படி நிவாரணம் வழங்க முடியாத கிராமமாகும்.
 தரை வழிப்பாதை தடைப்பட்டிருந்தமையை  கவனத்தில் கொண்டு ஏற்கனவே 23.12.2012 திகதி மடு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தினால் தேவையான உலர் உணவுப் பொருட்கள் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தும் முசலி மக்களுக்கு என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மீள் எழுச்சித்திட்டத்தினால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் எமக்கு கையளிக்கப்பட்டது.

இதன் போது அப்பொருட்களில் அரை வாசி பொருட்கள்  குஞ்சு குளமக்களுக்கு மனிதாபிமான ரீதியில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் 27-12-2012 கடல் மார்க்கத்தின் ஊடாக படகு மூலம் மாவட்ட செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டது. 

குறித்த குஞ்சுக்குள கிராம அலுவலகரும் அப்படகில் சென்றிருந்தார். 

ஏறக்குறைய 06 நாட்களின் பின்னர் வழங்கப்பட்ட பொருட்கள் முழுவதுமின்றி குறிப்பிட்ட சில பொருட்கள் மட்டும் மாவட்ட செயலகத்தின் முன் வாயிலில் அனாதரவாக வைக்கப்பட்டிருந்தது.



 இச் செயற்பாட்டிற்கு குறித்த கிராமத்தின் பங்குத்தந்தை தலைமை வகித்ததை அறிந்த மன்னார் மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை  மற்றும் குரு முதல்வர் அருட்தந்தை விக்டர்சோசை அடிகள் ஆகியோர் மாவட்ட செயலகத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை வருகை தந்து பொருட்களை பார்வையிட்டதுடன் 03 நாட்களுக்கு தேவையான அளவு பொருட்கள் வழங்கப்பட்டு இருந்ததை அறிந்து பொருட்களை இவ்வாறு மீள அனுப்பிய விடயத்திற்காக தனது மன வருத்தத்தை அரசாங்க அதிபர்,மேலதிக அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்களுக்கு தெரிவித்ததுடன் வாகனம் கொண்டு வந்து குறித்த பொருட்களை மீள கொண்டு சென்று உண்மையாக பாதிக்கப்பட்ட மடு பிரதேச மக்களுக்கு வழங்கியுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர மேலும் தெரிவித்தார்.

குஞ்சுக்குளம் மக்களினால் திருப்பி அனுப்பப்பட்ட உலர் உணவுகள் ஆயரினால் பொறுப்பேற்கப்பட்டு திருப்பி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது-மன்னார் அரச அதிபர்
குஞ்சுக்குளம் மக்களினால் திருப்பி அனுப்பப்பட்ட உலர் உணவுகள் ஆயரினால் பொறுப்பேற்கப்பட்டு திருப்பி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது-மன்னார் அரச அதிபர் Reviewed by NEWMANNAR on January 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.