மன்னார் மாவட்டத்தில் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள்.
மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது தொடர்பான மீளாய்வுக்கூட்டத்தில் ஏற்பட்ட கருத்து மோதலினைத்தொடர்ந்து குறித்த கூட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் இடம் பெற்று வருகின்றது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,,
மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக இடமாற்றம் செய்யப்படாத நிலையில் உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது தொடர்பாக அவசர மீளாய்வுக்கூட்டம் கடந்த புதன் கிழமை மாலை 3.30 மணியளவில் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 400 ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வந்தது.குறித்த ஆசிரியர்கள் மன்னார் மாவட்டத்திற்குள் உள்ள பாடசாலைகளிலே இடமாற்றம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பான மீள் பரிசீலினை இடம் பெற்றுக்கொண்டிருந்த போது செயலாளரினால் நியமனம் செய்யப்படாத நிலையில் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளரினால் நியமனம் வழங்கப்பட்ட கோட்டக்கல்வி அதிகாரியாக செயற்படும் ஜெகநாதன் என்பவருக்கும்,மன்னார் வலயக்கல்விப்பணிமனையில் கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் இடம் பெற்றது.
குறித்த மன்னார் கோட்டக்கல்வி அதிகாரி மன்னார் வலயக்கல்வி பணிமனையில் கடமையாற்றும் பெண் அதிகாரியை பல்வேறு தீய வார்த்தைகளினால் கதைத்து பேசியுள்ளார். இதன் போது மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளரும்,சக அதிகாரிகளும் அமைதியாக இருந்துள்ளனர்.இதனால் குறித்த இடமாற்றம் தொடர்பான கூட்டம் .இரவு 7.30 மணியளவில் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

Reviewed by Admin
on
January 26, 2013
Rating:

No comments:
Post a Comment