மன்னாரிலும் இளம் பெண்களை படையில் இணையுமாறு வற்புறுத்து
மன்னார் மாவட்டத்தில் இளம் பெண்களை படையில் இணையும்படி வீடு வீடாகச் சென்று சிறீலங்கா படையினர் வற்புறுத்தி வருவதாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பெற்றோர்கள் பயம் கலந்த கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.
ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமையைப் பயன்படுத்தி சிவில் வேலை வாய்ப்பெனக் கூறி படையில் இனைத்துக் கொள்ளப்பட்ட 103 பெண்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கும் உள்ளாகியுள்ளதாக பரவலாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் படையினர் பெண் பிள்ளைகள் உள்ள வீடுகளுக்குச் சென்று, அவர்களை படையில் இணையுமாறு வற்புறுத்தி வருவது பொது மக்களிடையே பயம் கலந்த அச்சத்தை உண்டாக்கியுள்ளது. பொதுவாக படைத்தரப்பினருக்கு புதியவர்களை ஆட்சேர்ப்பு செய்யும்போது வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுயமாக விண்ணப்பங்களை கோரியே ஆட்சேர்ப்பு செய்வது வழமையாகும்.
அந்த நடைமுறையே வடக்கு கிழக்கில் போர் இடம்பெற்றுக் கொண்டு இருந்த வேளையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது புதிய நடைமுறையாக வீடு வீடாகச் செல்லும் ஆக்கிரமிப்புப் படையினர், பெண்களை படையில் இணைந்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தி வருவதாக, பொது அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
இதனால் பெண் பிள்ளைகள் உள்ள வீடுகளின் பெற்றொர்கள் தமது பிள்ளைகளை தனிமையில் வீடுகளில் விட்டுச்செல்லக் கூட அஞ்சும் நிலமை காணப்படுவதாகவும் மன்னார் மாவட்ட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Reviewed by NEWMANNAR
on
January 20, 2013
Rating:

No comments:
Post a Comment