அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவிருந்த நிவாரணப்பொருட்கள் பதுக்கி வைத்து பழுதடைந்த நிலையில் மீட்பு-களஞ்சிய சாலைக்கு சீல் வைப்பு.

மன்னார் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட உலர் உணவுப்பொருட்களில் ஒரு தொகுதி பொருட்கள் மக்களுக்கு வினியோகிக்கப்படாத நிலையில் மன்னார் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் களஞ்சிய சாலையில் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் மிகவும் பழுதடைந்த நிலையில் நேற்று(20-1-2013) சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.


 இந்த நிலையில் குறித்த களஞ்சியசாலை தற்போது சுகாதாரமற்ற முறையில் காணப்படுவதினைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி குணசீலன் அசர்களினால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

 இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,

 மன்னார் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நிவாரணப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த பொருட்கள் மன்னார் மாவட்டச் செயலகத்தினால் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினுடாக வழங்கி வைக்கப்பட்டது.

 இதன் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய அளவு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் மக்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி உலர் உணவுப்பொருட்களான அரிசி,மா,சீனி,உருளைக்கிழங்கு,பெரிய வெங்காயம், நெத்தலிக்கருவாடு போன்றவை மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரியினால் மன்னார் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 குறித்த பொருட்கள் வைக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் எந்த அதிகாரிகளும் குறித்த பொருட்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் மூடியிருந்த குறித்த களஞ்சிய சாலையில் இருந்து சில நாட்களாக துர்நாற்றம் வீசி வந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ அதிகாரி தலைமையிலான குழுவினர் அவற்றை அவ்விடத்தில் இருந்த அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 இதன் போது இரு உழவு இயந்திரங்களில் பழுதடைந்த உருளைக்கிழங்கு,நெத்தலிக்கருவாடு,பெரிய வெங்காயம் ஆகியவை ஏற்றப்பட்ட நிலையில் பொது மக்களினால் உரிய அதிகாரிகளுக்கு உடன் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த பொருட்கள் கொட்டுவதற்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸார்,இராணுவம்,மன்னார் நகர சபை தலைவர்,உறுப்பினர்கள்,மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி,மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் உற்பட பலர் பிரசன்னமாகியிருந்தனர்.

 இந்த நிலையில் மேலும் இரண்டு வாகனங்களில் உலர் உணவுப்பொருட்கள் ஏற்றப்பட்டு உடனடியாக பாலியாறு மக்களுக்கு வினியோகிக்க கொண்டு செல்லப்படவிருந்த நிலையில் குறித்த பொருட்களை மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்கர் குனசீலன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றி பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து மன்னார் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் களஞ்சிய சாலை திறக்கப்பட்டு பொது சுகாதார பரிசோதகர்களினால் பார்வையிடப்பட்ட போது குறித்த களஞ்சிய சாலையில் பாரிய துர்நாற்றம் வீசியதோடு உலர் உணவுப்பொருட்கள் பழுதடைந்து அழுகிய நிலையில் காணப்பட்டது.

 குறித்த களஞ்சிய சாலையில் உள்ள ஏனைய பொருட்களும் பழுதடையும் நிலையில் காணப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து குறித்த களஞ்சிய சாலையில் குறித்த நேரத்தில் சுகாதார சீர் கேட்டுடன் காணப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜீ.குணசீலன் அவர்களினால் குறித்த களஞ்சிய சாலை சீல் வைத்து மூடப்பட்டதோடு குறித்த களஞ்சிய சாலைக்கு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

 வெள்ள அனர்த்தத்தின் போது மக்கள் பாதிப்படைந்திருந்த நிலையில் பொது அமைப்புக்களினால் நிவாரணப்பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உரிய அதிகாரிகளிடம் கேட்ட போது பொருட்கள் கையிருப்பில் இல்லை என தெரிவித்த நிலையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பணிப்பாளர் ஏன் களஞ்சியசாலையில் குறித்த உலர் உணவுப்பொருட்களை பதுக்கி வைத்தார் என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவிருந்த நிவாரணப்பொருட்கள் பதுக்கி வைத்து பழுதடைந்த நிலையில் மீட்பு-களஞ்சிய சாலைக்கு சீல் வைப்பு. Reviewed by NEWMANNAR on January 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.