மன்னார் கடற்பரப்பில் நான்காவது எரிபொருள் கிணறுக்கான அகழ்வுகள் அடுத்தமாதம்: கெய்ன் நிறுவனம்
இலங்கையின் மன்னார் கடற்பரப்பில் நான்காவது எரிபொருள் கிணற்றின் அகழ்வு பணிகள் அடுத்த மாதம் ஆரம்பமாகும் என கெய்ன் நிறுவனம் தெரிவிக்கின்றது.
அகழ்வு நடவடிக்கைகள் இவ்வருட நடுப்பகுதியிலேயே இடம்பெறும் என இதற்கு முன்னர் நிறுவனம் தெரிவித்திருந்தபோதிலும் அடுத்தமாதம் அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியும் என நிறுவனம் வெளியிட்டுள்ள அதன் காலாண்டு நிதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கெய்ன் நிறுவனம் இதற்கு முன்னர் மன்னாரில் மூன்று எரிபொருள் கிணறுகளில் அகழ்வு பணிகளை மேற்கொண்ட நிலையில் இரண்டு கிணறுகளில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. அகழ்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் துளையிடும் கப்பல் முற்கூட்டியே கிடைத்தமையும், ஒருங்கமைப்பு நடவடிக்கைகள் மிக சிறந்த மட்டத்தில் காணப்பட்டமையுமே அகழ்வு நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்க காரணங்களாக அமைந்ததாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கெய்ன் இந்திய நிறுவனம் இக்காலாண்டில் மொத்தமாக 791 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளது. இது கடந்த வருடத்தின் இக்காலண்டுடன் ஒப்பிடுகையில் 38 வீத அதிகரிப்பாகும். வரிக்கு பின்னரான இலாபம் 540 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளதுடன் கடந்த ஆண்டு இக்காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 49 வீத வளர்ச்சியாகும். இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆபிரிக்காவில் தமது நிறுவனம் சிறப்பான முறையில் அகழ்வுபணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் இதன் பயனாக எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியன கண்டெடுக்கப்பட்டதாக கெய்ன் இந்தியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி பி.இளங்கோ தெரிவித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Reviewed by Admin
on
January 25, 2013
Rating:

No comments:
Post a Comment