மன்னார் மாவட்ட சைவக் கலை இலக்கிய மன்றம் நடத்தும் முத்தமிழ் விழா
மன்னார் மாவட்ட சைவக் கலை இலக்கிய மன்றம் நடத்தும் முத்தமிழ் விழா எதிர் வரும் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் ந்டைபெறவுள்ளது.
மன்றத்தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக்குருக்கள் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவின் பிரதம விருந்தினராக வவுனியாத் தமிழ்ச்சங்கத் தலைவர் தமிழ்மாமணி ,தமிழருவி த. சிவகுமாரன் கலந்து கொள்வார்.
முதல் நிகழ்வாக இடம் பெறும் விழாநாள் மங்கலத்தில் மன்னார் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ வீ. விஜயபாபுக்குருக்கள் நந்திக் கொடியினை ஏற்றி வைப்பார்.
மங்கல இசையினை,லயஞான நாதகலாசூரி, வித்துவான் சிவபாலன் குழுவினர் வழங்குவார்கள்.
மங்கல விளக்குகளை பிரம்மஸ்ரீ மனோ. ஐங்கர சர்மா தம்பதி,வைத்திய கலாநிதி மு. கதிர்காமநாதன் தம்பதி,பொறியியலாளர் செ.சி.இராமகிருஷ்ணன் தம்பதியர் ஏற்றி வைப்பர்.
தமிழ் வாழ்த்தினை பேசாலை பாத்திமா மத்திய மகா வித்தியாலய மாணவிகள் பாடுவார்கள்.
திருமுறையினை எஸ்.செல்வரட்ணம் ஓதுவார்கள்.
வரவேற்புரையினை மன்னார் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி பு.மணிசேகரன் நிகழ்த்துவார்.
மன்னார் ஸ்ரீ சாகித்தியா நடனப் பள்ளியின் மாணவர்கள்,வரவேற்பு நடனத்தை வழங்குவார்கள்.
ஆசியுரையினை திருக்கேதீஸ்வர சிவஸ்தலத்தின் பிரதமகுருஇ சிவஸ்ரீ தி. கருணானந்தக் குருக்கள் வழங்குவார்.
தலைமையுரையினைத் தொடர்ந்து மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி மாணவிகளின் பண்ணிசை இடம் பெறும்.
வாழ்த்துரையினை மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் நிகழ்த்துவார்கள்.
அதனைத் தொடர்ந்து மன்னார் ஸ்ரீ சாகித்தியா நடனப்பள்ளியின் மாணவி செல்வி ஐஸ்வர்யா ஐங்கரசர்மாவின் தனி நடனம் இடம்பெறும்.
முத்தமிழ் விழாவின் சிறப்பு நிகழ்வாகதமிழுக்கும் கலை இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள்இகலைஞர்கள் ஐவர் விழா மேடையில் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.
பிரதமவிருந்தினர் உரையினைத் தொடர்ந்து விசேட நிகழ்வாக 'எக்காலத்திற்க்கும் பொருத்தமான அறங்களைப் பெரிதும் எடுத்தியம்பிய இதிகாசம் இராமாயணமா? மகாபாரதமா?' என்ற பொருளில் பட்டிமண்டபம் இடம் பெறும். பிரதம விருந்தினர் தமிழருவி த. சிவகுமாரன் நடுவராக அமைய இடம் பெறும் இப்பட்டிமண்டபத்தில் 'இராமாயணமே' எனஇ சிவஸ்ரீ மஹா.தர்மகுமாரக் குருக்கள், எஸ்.ரமேஷ்,எல்.சுரேஷ் ஆகியோரும் 'மகாபாரதமே' என,வே.பொ. மாணிக்கவாசகர், சோ.றோகன்ராஜ், பி. சதீஷ் ஆகியோரும் வாதிடுவர்.
இதனைத்தொடர்ந்து மன்னார் சித்தி வினாயகர் இந்துக் கல்லூரியினர் வழங்கும் 'அரிச்சந்திர மயானகாண்டம்' இடம்பெறும்.
மன்னார் கலாபர்ணா நடனப் பள்ளி வழங்கும் தில்லானாவினைத் தொடர்ந்து நன்றியுரையினை மன்றத்தின் பொருளாளர் செந்தூரன் வழங்க நிறைவாக தமிழ்மொழி வாழ்த்தினை அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆலய அறநெறிப் பாடசாலை ஆசிரியை திருமதி. லி. முத்துகுமாரசாமி பாடுவார்.
மன்னார் மாவட்ட சைவக் கலை இலக்கிய மன்றம் நடத்தும் முத்தமிழ் விழா
Reviewed by NEWMANNAR
on
January 31, 2013
Rating:

No comments:
Post a Comment