மன்னாரில் மீண்டும் வெள்ளம்.-பட இணைப்பு
மன்னாரில் தற்பொது தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
கோந்தைப்பிட்டி,தாழ்வுபாடு,எரு க்கலம் பிட்டி ஆகிய கிராமங்களில் மழை வெள்ள நீர் சுழ்ந்துள்ளது.
இதனால் குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த கிராம மக்கள் பலர் தமது வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்களில் தங்கியுள்ளனர்.ஏனையவர்கள் தமது வீடுகளில் இடம் பெயராமல் உள்ளனர்.
-இதே வேளை தாழ்வுபாட்டு கிராமத்தில் உள்ள சிறுவர் பாடசாலை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
-பாதீக்கப்பட்ட மக்களை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் நேற்று புதன் கிழமை நேரடியாகச் சென்று பார்வையிட்டதோடு வெள்ள நீரை வெளியேற்றுவதற்காண நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
இதன் போது மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம்,டெலோ இயக்கத்தின் மாவட்ட பொருப்பாளர் பற்றிக் வினோ ஆகியோரும் சென்று வெள்ளப்பாதீப்புக்களை பார்வையிட்டனர்.
(மன்னார் நிருபர்)
மன்னாரில் மீண்டும் வெள்ளம்.-பட இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
January 10, 2013
Rating:
No comments:
Post a Comment