பிரித்தானியாவில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்
பிரித்தானியா தனது குடியேற்றக் கொள்கையில் முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது.
புதிய விதிமுறைகளின் காரணமாக, இரட்டை குடியுரிமை கொண்ட பலர் தேவையான ஆவணங்கள் இல்லையெனில் பிரித்தானிய எல்லைக்குள் நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது.
இரட்டை குடியுரிமை
இந்த புதிய நடைமுறைகள் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய விதிகளின்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இரட்டை பிரித்தானிய குடிமக்கள், பிரித்தானியாவிற்கு பயணம் செய்யும்போது செல்லுபடியாகும் பிரித்தானிய கடவுச்சீட்டு அல்லது ‘Certificate of Entitlement’ எனப்படும் உரிமைப் பத்திரத்தை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள் இல்லாதவர்கள் விமானம், கப்பல் அல்லது ரயில் சேவைகளில் ஏற அனுமதி மறுக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு பயணம் செய்யும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள், இலங்கை கடவுச்சீட்டுடன் இணைத்து பிரித்தானிய கடவுச்சீட்டு அல்லது உரிமைப் பத்திரத்தை காண்பிக்க வேண்டும்.
மேலும், பிரித்தானிய அல்லது ஐரிஷ் குடிமகனாக இல்லாதவர்கள் மற்றும் விலக்கு வழங்கப்படாத பயணிகள், குறுகிய கால பயணங்களுக்கு ETA (Electronic Travel Authorisation) எனப்படும் மின்னணு பயண அனுமதிக்காக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த ETA அனுமதிக்கான கட்டணம் 16 முதல் 20 பவுண்டுகள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
February 17, 2026
Rating:


No comments:
Post a Comment