மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் 3 பேருக்கு 'சியாத் இயக்கம்'' என்ற பெயரில் கொலை மிரட்டல்.
மன்னார் நீதிமன்றம் மீது கடந்த வருடம் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது சம்பவ இடத்தில் நின்று செய்திகளை சேகரித்த மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவருக்கு எதிராக 'சியாத் இயக்கம்'' என்ற பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கொலை மிரட்டல் தொடர்பான கடிதம் இன்று செவ்வாய்க்கிழமை(15-01-2013) குறித்த 3 ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மிரட்டல் கடிதமானது மன்னார் மாவட்டத்தின் தொலைக்காட்சி செய்தியாளர்களான ஏ.ரீ.மார்க்,என்.ஜே.பெலிஸ்டஸ் பச்சக் மற்றும் பத்திரிக்கை செய்தியாளரான எஸ்.ஆர்.லெம்பேட் ஆகியோருக்கே குறித்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதங்கள் தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தின் போது நீதிமன்னறத்திற்கு ஆதரவாகவும்,அரசிற்கும்,அமைச்சர் றிஸாட் பதீயூதின் அவர்களுக்கு எதிராகவும் செயற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ஸாம் மதத்தை கேவலப்படுத்தும் விதத்தில் செய்தி எழுதப்பட்டுள்ளதாகவும் இறுதி எச்சரிக்கை எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்காளாகிய தங்களை இறுதியாக எச்சரிப்பதோடு 'அல்லாவிடம'; கொடுக்கப்படுவீர்கள் என'சியாத் இயக்கம்'' என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் ஒருவர் தெரிவிக்கையில்,,,,
இவ்விடையம் உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடக நிறுவனங்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்ட நிலையில் எங்கள் அனைவருக்கும் எதிராக தொடர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
இது தொடர்பில் நாங்கள் ஏற்கனவே மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்ம்.
இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம் பெற்று வருகின்றது.
தற்போது குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதோடு ஊடக அமைப்புக்களின் ஊடாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ளது.
-குறித்த கொலை மிரட்டல் கடிதமானது நீதிமன்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு படுத்தி அனுப்பப்பட்டுள்ளமை என்பதினால் எமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் மற்றும் ஆபத்துக்கள் ஏற்படும் படசத்;தில் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று அமைச்சரும்,ஏனைய சந்தேக நபர்களுமே பொறுப்புக்கூற வேண்டும் என பகிரங்கப்படுத்தவுள்ளோம்ம். என குறித்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.
மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் 3 பேருக்கு 'சியாத் இயக்கம்'' என்ற பெயரில் கொலை மிரட்டல்.
Reviewed by NEWMANNAR
on
January 15, 2013
Rating:
1 comment:
inda pirasuraththil waarthaikalai parkum podu.. idu oru muslim eludiya kadidhamaga theriya willai...islam, allah, bismillah enra warthagal iwwaru eluduwathillai..
Post a Comment