வறுமையற்ற இலங்கையை உருவாக்குவோம்'எனும் வேலைத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பித்து வைப்பு.படங்கள்
-இந்த நிலையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் ஆரம்பித்து வைக்கும் முகமாக குறித்த வேலைத்திட்டம் தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்று புதன் கிழமை காலை மன்-அல்-அஸ்ஹர் ம.வி நவோதைய பாடசாலையில் பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.
வன்னி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிஸாட் பதீயூதின் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கலான முத்தலீப் பாபா பரூக்,ஹீனைஸ் பாரூக் ,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர,மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டி மேல், மன்னார் பிரதேசச் செயலாளர் செல்லையா தயானந்தா,உதவி பிரதேசச் செயலாளர் வி.பாவாகரன் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மீன்பிடி,விவசாயம்,கால்நடை,தொழில் நுற்ப ஆராய்ச்சி,கைத்தொழில் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதோடு குறித்த திணைக்களங்களின் தலைவர்கள்; விளக்கங்களையும் வழங்கினர்.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் றிஸாட் பதீயூதின்,, கடந்த 30 ஆண்டுகளாக அழிவுப்பாதையில் சென்ற எமது நாடு குறிப்பாக வன்னி மாவட்டம் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் குறித்த செயல் திட்டத்தின் மூலம் மீண்டும் கட்டியெழுப்பப்படுகின்றது என தெரிவித்தார்.
(மன்னார் நிருபர்)
வறுமையற்ற இலங்கையை உருவாக்குவோம்'எனும் வேலைத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பித்து வைப்பு.படங்கள்
Reviewed by NEWMANNAR
on
January 16, 2013
Rating:
No comments:
Post a Comment