மன்னாரில் மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு
மன்னாரில் மரக்கறி வகைகளின் விலை என்றும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை தெரிவித்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கின் காரணமாக உள்ளூர் உற்பத்திப்பொருட்கள் பாரிய அளவில் அழிவடைந்துள்ளதாக உள்ளூர் உற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேபோன்று தென் பகுதியிலும் மரக்கறி செய்கை பாரிய அளவில் அழிவடைந்துள்ளது.
இதனால் தம்புள்ளை மற்றும் வவுனியா மத்திய மரக்கறி விற்பனை நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு மரக்கறி வகைகளே கொண்டு வரப்படுகின்றது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மரக்கறி வகைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் வவுனியா மற்றும் தம்புள்ளை மரக்கறி மத்திய விற்பனை நிலையங்களுக்குச் சென்று மரக்கறி வகைகளை கொள்வனவு செய்கின்றனர்.
இந்த நிலையில் அதிகரித்த விலைக்கே அவர்களுக்கு மரக்கறிகள் விற்கப்படுகின்றன. இந்த நிலையில் மன்னாரிலும் மரக்கறி வகைகளின் விலை அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையில் ஒரு கிலோகிராம் கரட்-200 ரூபாய்க்கும் லீக்ஸ் -160, போஞ்சி-280, பயத்தை – 280, கத்தரி- 280, கறிமிளகாய்- 350, கோவா-120, பச்சை மிளகாய்- 400 ரூபாய்;கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
(விநோத் )
மன்னாரில் மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு
Reviewed by NEWMANNAR
on
January 23, 2013
Rating:

No comments:
Post a Comment