ஆசிரியர் திரு.ரி.குருபரன் அவர்களினது இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்க! திருக்கேதீச்சரம் சிவன்அருள் இல்லம் கோரிக்கை.

ஆசிரியர் திரு.ரி.குருபரன் அவர்களினது இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்க! திருக்கேதீச்சரம் சிவன்அருள் இல்லம் கோரிக்கை.
'எமது இல்லச் சிறார்களினதும், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஏனைய சிறார்களினதும் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையும், ஈடுபாடும் மிக்க ஆசிரியரான திரு.குருபரன் அவர்களினது இடமாற்றம் எம்மையும் இக் கிராம மக்களையும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இப் பாடசாலை தொடர்பான சிரமதானம் முதற் கொண்டு, இப்பாடசாலையிலே நடைபெறுகின்ற எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் முன்னின்று ஒழுங்குபடுத்தி முழுமையான ஈடுபாட்டுடன் செய்து முடிப்பவர் இவர். இப் பாடசாலையிலே அண்மையிலே ஆரம்பிக்கப்பட்ட க.பொ.த. (உயர்தர) வகுப்புக்கு தமிழ்ப் பாடம் கற்பிப்பவர் இவர். மிகவும் துரித கதியில் முன்னேற்றமடைந்து வரும் இக் கல்லூரியின் வளர்ச்சியிலே இவரது கடின உழைப்பு காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. இவர் இல்லாத இக் கல்லூரியின் எதிர்காலத்தை எண்ணும் போது ஏமாற்றமாகவேயுள்ளது.

இன்று போல 'கொங்கிரீட்' சாலை வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் மேம்பாடு அடையாத ஒரு காலகட்டத்திலே, பல்வேறு சிரமங்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் மத்தியில் முள்ளிப்பள்ளம் ஊடாக இக்கல்லூரிக்கு வருகை தந்து இக் கல்லூரியைக் கட்டியெழுப்பி இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்களில் இவரும் ஒருவர் - முக்கியமானவர். இவ்வாறு நெருக்கடியான காலகட்டத்தில் தோள் கொடுத்த ஒருவiர் அந்த நெருக்கடியான காலகட்டத்தையும் உள்ளடக்கிய ஏழு வருடகாலம் இப் பாடசாலையிலே பணியாற்றியதற்காக வேறு பாடசாலைக்கு போ என இடமாற்றம் செய்வதனை இக் கிராம மக்கள் ஒரு நன்றி கெட்ட செயலாகவே கருதுகின்றனர்.
ஒரே பாடசாலையிலே ஏழு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தும் பணியாற்றிக் கொண்டிருக்கும் வேறு ஆசிரியர்கள் இந்த வலயத்திலே இருக்கத்தக்கதாக இவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், இதன் போது இப் பாடசாலைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் கவனத்திற் கொள்ளப்படாததும் மிகவும் கவலையளிப்பதாகவுள்ளது.
மன்னாரிலே வசிப்பிடத்தைக் கொண்டிருந்த போதிலும், இக்கல்லூரியினதும் மாணவர்களினதும் நன்மையைக் கருதி திருக்கேதீச்சரத்திலேயே தங்கியிருந்து பணியாற்றிய ஆசான் இவர். இத்தகைய ஈடுபாடு மிக்க ஆசிரியரது சேவையினை இழப்பது என்பது இக்கல்லூரிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட ஒரு கொடிய தண்டனையாகவே எமக்குப் படுகின்றது.
எனவே எமது பிள்ளைகளினது கல்வி மேம்பாட்டினைக் கருத்திற் கொண்டு, இவரது இடமாற்றத்தினை உடனடியாக ரத்து செய்து உதவுமாறு தங்களிடம் தயவாக வேண்டி நிற்கின்றோம்.' ஏன திருக்கேதீச்சரம் சிவன்அருள் இல்லத்தின் சார்பாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்;டுள்ளது.
திருக்கேதீச்சரம் கிராம மக்களும் கோரிக்கை
திரு. குருபரனது இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு கிராம மக்கள் ஒப்பமிட்டு தங்களது கிராம முன்னேற்றச் சங்கத்தின் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ் வேண்டுதல்கள் தொடர்பில் வலயக் கல்விப்பணிப்பாளர்,; ஒரு திட்டவட்டமான முடிவினை அறிவிக்கும் வரை, திரு.குருபரன் அவர்களை எதுவித இடையூறுகளுமின்றி இப் பாடசாலையிலேயே தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கக் கூடிய வகையில் உரிய அறிவுறுத்தல்களை வழங்கி உதவுமாறும் வேண்டுதல் விடுத்துள்ளனர்.
ஆசிரியர் திரு.ரி.குருபரன் அவர்களினது இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்க! திருக்கேதீச்சரம் சிவன்அருள் இல்லம் கோரிக்கை.
Reviewed by NEWMANNAR
on
January 29, 2013
Rating:

No comments:
Post a Comment