அண்மைய செய்திகள்

recent
-

எங்களை மாற்று இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுங்கள்-மன்னார் தம்பனைக்குளம் கிராம மக்கள் செல்வம் எம்.பி யிடம் கோரிக்கை.


மல்வத்து ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக பாதீக்கப்பட்டு இடம் பெயர்ந்து மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்கள் தம்மை மாற்று இடம் ஒன்றில் மீள்குடியமர்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அமைக்கலநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளத்தினால்  இடம் பெயர்ந்து மீண்டும் மீள் குடியமர்ந்த மக்களை பார்வையிடுவதற்காக நேற்று(3-1-2013) வியாழக்கிழமை தம்பனைக்குளம் கிராமத்திற்கு சென்ற போதே அக்கிராம மக்கள் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக பாதீக்கப்பட்ட மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் மேலும் தெரிவிக்கையில்,,,

கடந்த மூன்று தடவைகள் இது போன்ற அனர்த்தம் எமது கிராமத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் நாங்கள் பல்வேறு இடப்பெயர்வுகளை சந்தித்துள்லோம். 

கூலி வேளை செய்து எமது வீட்டிற்கு தேவையான உடமைகளை சேகரித்தோம்.ஆனால் குறித்த வெள்ளப்பெருக்கின் காரணமாக  நாங்கள் சிரிது,சிரிதாக சேகரித்த உடமைகள் அனைத்தும் வெள்ள நீரினால் அழிவடைந்துள்ளது.

எமது பிள்ளைகளின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியான நிலையில் உள்ளது.
எமது கிராமத்தில் 360 குடும்பங்கள் உள்ளது.

-சில வீடுகள் மேட்டு நிலத்தில் காணப்படுகின்றது.ஏனை வீடுகள் தாழ்வான பகுதிகளில் உள்ளது.
இதனால் நாங்கள் தொடர்ந்தும் பாதீக்கப்படுவோம் என்ற அச்சம் எமக்குள் உள்ளது.

கடந்த வாரம் மன்னாருக்கு வருகை தந்த அனார்த்த முகாமைத்துவ அமைச்சர் தம்பனைக்குளம் மக்களின் விருப்பத்திற்கு அமைவாக பாதுகாப்பான இடம் ஒன்றில் குடி அமர்த்துவதாகவும் ஒவ்வெரு குடும்பத்திற்கும் 1 ஏக்கர் காணியும் ஒரு இலட்சம் ரூபாய் பணமும் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
எனவே வருடா வருடம் குறித்த இடப்பெயர்வை சந்திக்கும் எமக்கு நிரந்தரமான ஒரு தீர்வு தற்போது தேவைக்கடுகின்றது.

எனவே அதிகமான குடும்பங்கள் வேறு இடத்தில் குடியமர விரும்புகின்றனர்.
-எனவே அரச உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அனைத்து மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தம்பனைக்குளம் கிராம மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினருடன் டெலோ இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் பற்றிக் வினோ,நானாட்டான் பிரதேச சபையின் தலைவர்,உப தலைவர் ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர் )







எங்களை மாற்று இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுங்கள்-மன்னார் தம்பனைக்குளம் கிராம மக்கள் செல்வம் எம்.பி யிடம் கோரிக்கை. Reviewed by NEWMANNAR on January 04, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.