மன்னார் பிரதேச சபையின் உப தலைவருக்கு கொலை மிரட்டல்
மன்னார் பேசாலை பகுதியில் அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி பாதிக்கப்பட்ட மக்கள் மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
கடந்த வாரம் இடம்பெற்ற மன்னார் பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தின்போது இவ்விடயம் தொடர்பில் அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன்போது பல்வேறு தர்க்கங்கள் சபையில் ஏற்பட்டுள்ளன.
இந்தநிலையில் தனது கையடக்கத் தொலைபேசிக்கு இனம் தெரியாத நபர் ஒருவர் அழைப்பை ஏற்படுத்தி மதுபானசாலை தொடர்பில் தலையிட வேண்டாம் என எச்சரித்ததோடு தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும் இந்த நிலையில் உடனடியாக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மன்னார் பிரதேச சபையின் உப தலைவருக்கு கொலை மிரட்டல்
Reviewed by NEWMANNAR
on
January 22, 2013
Rating:
No comments:
Post a Comment