அண்மைய செய்திகள்

recent
-

நெருக்கடிக்குள் வாழும் தம்பனைக் கிராம மக்களுக்கு உதவுங்கள் – ஆனந்தன் கோரிக்கை!

தம்பனைக்குளம் பகுதியில்; குடியமர்ந்து ஐந்து வருடங்களுக்குள் மூன்று முறை வெள்ளத்தினால் இடம் பெயர்துள்ளனர். இந்த மக்களின் தேவைகளை அறிந்து ஆவர்களுக்கு மாற்றுக்காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கைவிடுத்துள்ளார்.


 இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மன்னார் மாவட்டம் மடு உதவி அரச அதிபர் பிரிவிற்குட்பட்ட தம்பனைக்குளம் கிராமவாசிகள் மல்வத்து ஓயாவில் நீர்மட்மம் அதிகரிப்பினால்; பாதிக்கப்பட்டுள்ளனர்.

 தற்போது வடக்கில் பெய்து வரும் அடைமழை காரணமாக மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் ஆற்றுநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது குறித்த கராமத்தில் 200 குடும்பங்களைச் சேர்ந்த 580 பேர் வரை பாதிக்கப்பட்டு மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் சின்னப்பண்டிவிரிச்சான் பாடசாலைகலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 1996ம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் யுத்தம் காரணமாக வடபகுதியிலிருந்து உடமைகள் அனைத்தும் இழந்து இடம் பெயர்ந்த மக்கள் மன்னார் மாவட்டத்தில் களிமோட்டை ஜூவநகர் போன்ற பல நலன்புரி நிலையங்களில் பல வருடங்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். குறித்த மக்களின் இடைவிடாத கோரிக்கைகள், பல அழுத்தங்களுக்கு மத்தியில் 2007ம் ஆண்டு காலப்பகுதியில் அரசினால் தம்பனைக்குளம் அரசகாணியில் புதிதாக குடியமர்த்தப்பட்டு வீட்டுத்திட்டமும் வழங்கப்பட்டது.

 இருப்பினும் குறித்த தம்பனைக்குளம் பகுதி களிமண் படைகொண்ட பகுதி மழைகாலங்களில் ஆற்று நீர் வீட்டுக்குள் வந்து விடும். கடந்த வருடங்களில் வெள்ளப்பெருக்கினால் விவசாயம், கால்நடைகள், வீட்டுத்தோட்டம், வர்த்தக நிலையம் வீட்டுத் தளபாடங்கள் போன்ற உடமைகள் அனைத்தும் இழந்ததனர் அந்த இழப்பை ஈடு செய்வதற்கு முன்பே மற்றுமொரு வெள்ள அழிவு இடப்பெயர்விற்கு முகம் கொடுத்துள்ளனர் இவ்வாறு அடிக்கடி அழிவை சந்திப்பதற்கு நாம் தயாராக இல்லையென்று குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

 தம்பனைக்குளம் பகுதியில்; குடியமர்ந்து ஐந்து வருடங்களுக்குள் மூன்று முறை வெள்ளத்தினால் இடம் பெயர்துள்ளனர். இந்த மக்களின் தேவைகளை அறிந்து ஆவர்களுக்கு மாற்றுக்காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மடு உதவி அரச அதிபர் மற்றும் மன்னார் அரசாங்க அதிபருக்கும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளனர் அத்துடன் இந்தவிடயம் தொடர்பாக இடர் முகாமைத்துவ அமச்சர் மகிந்த அமரவீர அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
நெருக்கடிக்குள் வாழும் தம்பனைக் கிராம மக்களுக்கு உதவுங்கள் – ஆனந்தன் கோரிக்கை! Reviewed by NEWMANNAR on January 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.