புனர்வாழ்வு முகாமை தரிசிக்க சர்வதேச செஞ்சிலுவை குழுவுக்கு அனுமதி!
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு(தடுப்பு)முகாம்களைப் பார்வையிடுவதற்கு அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவுக்கு சிறிலங்கா அரசாங்கம் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த 22ஆம் திகதி மருதமடுவில் உள்ள புனர்வாழ்வு முகாமுக்குச் சென்று பார்வையிட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்சன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு தொடக்கம் புனர்வாழ்வு முகாம்களுக்குச் சென்று பார்வையிடுவதற்கு அனைத்துலக செஞ்சிலுவைக் குழு அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி மருதமடு முகாமுக்குச் சென்ற அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினர் சுமார் 3 மணிநேரமாக, அங்குள்ள வசதிகள் குறித்து ஆராய்ந்ததாகவும் பிரிகேடியர் தர்சன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது ஜெனிவாவில் அழுத்தங்களைக் குறைத்துக் கொள்வதற்கு சிறிலங்கா கையாளும் உத்தி என்று கருதப்படுகிறது.
புனர்வாழ்வு முகாமை தரிசிக்க சர்வதேச செஞ்சிலுவை குழுவுக்கு அனுமதி!
Reviewed by NEWMANNAR
on
February 26, 2013
Rating:

No comments:
Post a Comment