அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 3 கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் உண்ணாவிரதப்போராட்டம் (படங்கள் )

மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட விவசாயிகள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து  இன்று 26 ஆம் திகதி (26-02-2013)   உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை முருங்கன் செம்மண் தீவு விளையாட்டு மைதானத்தில் நடாத்தினர்.

இன்று காலை 9 மணியளவில் குறித்த உண்ணாவிரதப்போராட்டம் முருங்கன் செம்மண் தீவு விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.









இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்தி ஆனந்தன்,எஸ்.வினோ நோகராதலிங்கம்,மக்கள் விடுதலை முன்னனியின் உறுப்பினர் சாமிவேல் செல்வக்குமார்,மன்னார் நகர சபை,மன்னார்,நாணாட்டான்,மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்கள்,உப தலைவர்கள்,உறுப்பினர்கள்,விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள்,அமைப்புக்களின் பிரதி நிதிகள்,விவசாயிகள் என பல நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த உண்ணாவிரத போராட்டம் முக்கிய 3 கோரிக்கைகளை முன் வைத்து மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல் கொள்வனவு செய்ய வேண்டும்,விவசாயிகளுக்கு எரிபொருள் மாணியம் வழங்கப்பட வேண்டும்,விவசாயிகளுக்கு வரட்சி மற்றும் வெள்ள நிவாரணங்கள் உடன் வழங்குவதோடு வங்கிக்கடனை உடன் இரத்துச்செய்ய வேண்டும் என்ற மூன்று அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த  உண்ணாவிரதப்போராட்டம் இடம் பெற்றது.

-காலை 9 மணி முதல் இடம் பெற்ற குறித்த உண்ணாவிரத போராட்டத்தை அடுத்து முருங்கன் செம்மண் தீவு பகுதியில் ; பொலிஸ் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 3 கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் உண்ணாவிரதப்போராட்டம் (படங்கள் ) Reviewed by NEWMANNAR on February 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.