அண்மைய செய்திகள்

recent
-

'வர்த்தக பிரிவில் 3 ஏ சித்தி பெற்றவர்களில் ஆயிரக்கணகானோருக்கு சிக்கல்'


2012 ஆம் ஆண்டு வர்த்தக பிரிவில் 3 ஏ சித்தி பெற்றவர்களில் ஆயிரக்கணக்கானோர் பல்கலைகழக வாய்ப்பை இழக்கு நிலை தோன்றியுள்ளதாக இளமையின் குரல் அமைப்பு எதிர்வு கூறியுள்ளது.


மருதானை சீ.எஸ்.ஆர் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவ்வமைப்பின் இணை ஏற்பாட்டாளர் கயான் ஜானக்க தெரிவித்தார்.



அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,



2012 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொது தராதர உயர்த்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் பல்கலைக்கழக கல்வித்துறையில் பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளன.



வருடத்திற்கு சராசரியாக 3 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. அதில் 3 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாடசாலைக்கு செல்கின்றனர்.



அவர்களில் 22 ஆயிரம் பேருக்கு மட்டுமே பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைய 2012 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு 2 இலட்சத்து 36 ஆயிரத்து 474 பேர் தோற்றினர்.


அதில் 1 இலட்சத்து 44 ஆயிரத்து 445 பேர் சித்திபெற்று பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதிப்பெற்றுள்ளனர்.



2009 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு 2 இலட்சத்து 38 ஆயிரத்து 931 பேர் தோற்றினர். அவர்களில் 1 இலட்சத்து 25 ஆயிரத்து 146 பேருக்கு  பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதிப்பெற்றனர். எனினும் 2008/2009 ஆம் கல்வியாண்டுக்கென 20 ஆயிரத்து 46 பேர் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டனர்.



2010 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு 2 இலட்சத்து 65 ஆயிரத்து 388 பேர் தோற்றினர். அவர்களில் 1 இலட்சத்து 42 ஆயிரத்து 415 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதிப்பெற்றனர். எனினும் 2009/2010 ஆம் கல்வியாண்டுக்கென 22 ஆயிரத்து 16 பேர் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டனர்.



2012 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு 2 இலட்சத்து 30 ஆயிரத்து 435 பேர் தோற்றினர். அவர்களில் 1 இலட்சத்து 44 ஆயிரத்து 445 பேர்பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதிப்பெற்றனர். அதில் எத்தனை பேர் பல்கலைகழகங்களுக்கு செல்லமுடியும் என்பது தெரியாது.



வர்த்தக பிரிவை பொருத்தவரையில் 2009/2010 ஆம் கல்வியாண்டுக்கென 4583 பேரும், 2010/2011 ஆம் கல்வியாண்டுக்கென 4876 பேரும் பல்கலைகழகங்களுக்கு உள்ளீர்க்கப்பட்டனர்.



2012 ஆம் ஆண்டு  பரீட்சைக்கு தோற்றியவர்களில் 9057 பேர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். அதில் 6471 பேர் வர்த்தக பிரிவில் 3  பாடங்களிலும் சித்திபெற்றுள்ளனர்.



கடந்த காலங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் வர்த்தக பிரிவிலிருந்து ஆகக்குறைந்தது 5000 பேர் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்குள் உள்ளீர்த்துக்கொள்ளப்படுவர். அப்படியாயின வர்த்தக பிரிவில் 3 ஏ சித்திபெற்ற ஏனையவர்களின் நிலைமை கேள்விக்குள்ளாகியுள்ளது.



இந்த நிலைமைக்கு தீர்வுகாண்பதற்கு அரச பல்கலைகழகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்வேண்டும். 1978 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசாங்க பல்கலைகழகங்கள் ஆரம்பிக்கப்படவில்லை.



பல்கலைகங்களின் அனுமதி தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கையெழுத்து வேட்டை பெறும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.
'வர்த்தக பிரிவில் 3 ஏ சித்தி பெற்றவர்களில் ஆயிரக்கணகானோருக்கு சிக்கல்' Reviewed by NEWMANNAR on February 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.