மன்னார் நகர திட்டமிடல் ஆலோசனைக் கூட்டம்.
மன்னார் நகர திட்டமிடல் ஆலோசனைக் கூட்டம் நேற்று (7-02-2013) வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் மன்னார் நகர சபையில் இடம் பெற்றது.
-மன்னாரின் மறுமலர்ச்சி 2022 திட்டத்தின் கீழ் இயங்குகின்ற உப குழுக்களில் ஒன்றான நகர திட்டமிடல் குழு மாதாந்தம் மன்னார் நகரம் சார் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான ஒன்று கூடல் இடம் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் திணைக்கள அதிகாரிகளுடன் நகர திட்டமிடல் ஆலோசனைக்கூட்டம் இடம் பெற்றதாக மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் தெரிவித்தார்.
இதன் போது வீதி அமைத்தல்,வடிகால் அமைத்தல்,ஏ-14 வீதி அகலத்தை தீர்மானித்தல்,எல்லைப்படுத்தல், நகர சபை வீதியின் அகலத்தை தீர்மானித்தல்,வீதிகளின் அமைப்புப்பற்றி தீர்மானித்தல், பாலங்கள் அமைத்தல்,வடிகான் அமைப்பை தீர்மானித்தல்,தற்போதைய பராமறிப்புக்கேற்ப வாய்க்கால்,வடிகாண்களை கண்டு பிடித்தல்,குளங்களை பாதுகாத்து பராமறித்தல்,குப்பை கூளங்களை அகற்றுவதும்,அவற்றை போடும் இடங்களை தீர்மானித்தல் போன்ற விடையங்கள்; ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
-குறித்த கலந்துரையாடலில் மன்னார் நகர சபை தலைவர்,உப தலைவர்,உறுப்பினர்,வீதி அபிவிருத்தி அதிகார சபை ,யுனோப்ஸ் ,டெலிகொம்,தேசிய நீர் வடிகாலமைப்புச்சபை,இலங்கை மின்சார சபை,சுகாதார திணைக்களம்,ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் தெரிவித்தார்.
மன்னார் நகர திட்டமிடல் ஆலோசனைக் கூட்டம்.
Reviewed by NEWMANNAR
on
February 08, 2013
Rating:
No comments:
Post a Comment