அண்மைய செய்திகள்

recent
-

நான்காவது எரிபொருள் கிணற்றின் அகழ்வு பணிகள் இன்று – கெய்ன் நிறுவனம் தகவல்

இலங்கையின் மன்னார் கடற்பரப்பில் இரண்டாம் கட்ட எண்ணெய் அகழ்வின் நான்காவது எரிபொருள் கிணற்றின் அகழ்வு நடவடிக்கைகளை (01.02.2013) இன்று ஆரம்பிக்கவுள்ளதாக கெய்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது.


 கெய்ன் இந்தியா மற்றும் லங்கா நிறுவன தொடர்பாடல் தலைவர் கலாநிதி. சுனில் பாரதி அகழ்வு பணிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் ‘கற்பிட்டி கடற்பரப்பிலிருந்து 22 கிலோமீற்றர் தொலைவிலேயே அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளன. இக்கிணறு CLPL Wallago என பெயரிடப்பட்டுள்ளது. இக்கிணறு கடலிலிருந்து ஒரு கிலோமீற்றர் ஆழத்திலும் 3 கிலோமீற்றர் கடல் படுகையிலும் அமைந்துள்ளது.

 தர்க்கரீதியாக பார்க்கும்போது இக்கிணற்றில் எரிவாயு காணப்படுவதற்கான வாய்ப்புக்கள் நிலவுகின்றன. எனினும் அங்கு எண்ணெய் இல்லை என கூற முடியாது. எண்ணெய் இருப்பதற்கான வாய்ப்புக்களும் காணப்படலாம்.” என குறிப்பிட்டார். சிங்கப்பூரை தளமாக கொண்ட ‘ட்ரான்ஸ் ஓஷன்” நிறுவனத்தின் ‘டிஸ்கவரர் செவன் சீஸ் ”Discoverer Seven Seas’ என்ற கப்பலை பயன்படுத்தியே அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இக்கப்பல் 6500 அடி ஆழம் வரையில் அகழ்வு பணிகளை மேற்கொள்ளும் வசதியை கொண்டுள்ளது.

நூற்றுக்கும் அதிகமான உறுப்பினர்களும் விசேட நிபுணர்களும் கப்பலில் தயார் நிலையில் உள்ளனர். அத்துடன் எண்ணெய் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதுவரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. இம்முதலீடு மேலும் அதிகரிக்கப்படலாம். அத்துடன் உள்ளுரில் பெற்றுக்கொண்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக 12.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக கெய்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 600 சதுரகிலோமீற்றர் பரப்பளவில் 3D தரவுகள் மூலம் அதிர்வுகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டதுடன் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இவ்வருட நடுப்பகுதியில் மேற்கொள்ள ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அகழ்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் துளையிடும் கப்பல் முற்கூட்டியே கிடைத்தமையும், ஒருங்கமைப்பு நடவடிக்கைகள் மிக சிறந்த மட்டத்தில் காணப்பட்டமையுமே அகழ்வு நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்க காரணங்களாக அமைந்தது.
நான்காவது எரிபொருள் கிணற்றின் அகழ்வு பணிகள் இன்று – கெய்ன் நிறுவனம் தகவல் Reviewed by Admin on February 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.