சவுதி ஆரேபியாவில் சிரைச்சேதம் செய்யப்பட்ட றிசானா நபீக்கிற்கு மன்னார் நகரசபையில் அனுதாவப்பிரேரணை நிறைவேற்றம்.
மன்னார் நகர சபையின் பொதுக்கூட்டம் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற பொழுது மன்னார் நகர சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் எஸ்.ரெட்ணசிங்கம் குமரேஸ் சவுதி அரேபியாவில் சிரைச்சேதம் செய்யப்பட்ட றிஸானா நபீக் மீதான அனுதாப பிரேரணையை முன்வைத்தார்.
-இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மன்னார் நகர சபை அமர்வில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் குறித்த அனுதாப பிரேரணையை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதையடுத்து றிஸானா நபீக்கிற்கான அனுதாபப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதே வேளை குறித்த கூட்டத்தில் மன்னார் நகர சபையின் மாதாந்த வருமானத்தை அதிகரித்தல்,பொது மயானங்கள்,சேமக்காலை,முஸ்ஸிலிம் மையவாடிகள் போன்றவற்றை புனரமைப்புச் செய்து அதனை தொடர்ச்சியாக பராமரிப்பது தொடர்பில் உறுப்பினர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
மேலும் மன்னார் நகர சபையின் எல்லைகளை உரிய முறையில் நிர்மாணிப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. இதன் போது குறித்த கூட்டத்தில் மன்னார் நகர சபையின் செயலாளர் திருமதி குரூஸ்,நகர சபை உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,ரெட்ணசிங்கம் குமரேஸ்,நிலாம்தீன் நகுசீன்,எஸ.பிருந்தாவனநாதன்,மெரினஸ் பெரேரா மற்றும் நகர சபையின் முகாமைத்துவ உதவியாளர் செல்வி ஜீ.அன்டனிட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சவுதி ஆரேபியாவில் சிரைச்சேதம் செய்யப்பட்ட றிசானா நபீக்கிற்கு மன்னார் நகரசபையில் அனுதாவப்பிரேரணை நிறைவேற்றம்.
Reviewed by Admin
on
February 01, 2013
Rating:

1 comment:
கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இடம்பெறும் ஆத்மாக்கள் திருவிழாவின் போது, எனது மரியாதையையும் மன்றாட்டுக்களையும் செலுத்துவதற்காக மன்னார் சேமக்காலைக்கு சென்றிருந்தேன். அவ்விடம் குப்பை கூளங்கள் நிறைந்த இடமாக பராமரிப்பு அற்று கிடந்ததை பார்த்து மிகவும் மனம் வருந்தி இவ்விடயம் பற்றி ஒரு குருவானவரிடம் பேசி மன்னார் ஆயருக்கும் மன்னார் நகர சபைக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தும் படி கேட்டிருந்தேன். கேட்டதட்கினங்க இவ்விடயம் அறியப்படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. இருப்பினும், இவ்விடயத்தில் மன்னார் நகரசபை எடுத்திருக்கின்ற தீர்மானம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது. நமது அன்புக்குரியவர்கள் காலம் சென்ற பிறகும் அவர்களுக்கு நாம் அளிக்கக்கூடிய மரியாதையின் அடையாளமாக இச்செயற்பாடு அமையும் என்று கூறிகொள்வதோடு, இவ்முயட்சி வெற்றிகரமாக அமைய மன்னார் சபை ஊழியர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரியபடுத்திகொள்கிறேன்.
Post a Comment