அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் இந்திய வீட்டுத்திட்டத்தில் நேர்மைத்தன்மை பேணப்பட்டுள்ளது- வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி.

இந்திய வீட்டுத்த திட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் இடம் தெரிவுகளில் நேர்மைத் தன்மை பேணப்பட்டுள்ளதாக வவுனியா நகர சபை உறுப்பினர் வவுனியா நல்லறவு ஒன்றியத்தின் தலைவருமான அப்துல் பாரி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷன் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


 அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,,,,,

 ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவராக தாங்கள் இந்திய உயர் ஸ்தானிகரிடத்தில் முறைப்பட்டுள்ள விடயங்களை ஊடகங்கள் மூலம் அறியக் கிடைத்தாகவும் முதலில் தற்போதைய உண்மை நிலை குறித்து வவுனியா அரசாங்க அதிபரிடத்தில் கேட்டு தெரிந்து கொள்ளாமல் யாரோ சொல்கின்றார்கள் என்பதற்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கி வவுனியா மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவுள்ள இந்த திட்டத்தை இல்லாமல் ஆக்கும் கைங்கரியங்களை செய்ய வேண்டாம் .

 கடந்த 30 வருட யுத்தத்தால் வடக்கில் அதிகமான பாதிப்புக்களை சந்தி்தவர்கள் முஸ்லிம்கள்.தாம் பிறந்து வாழ்ந்த பூமியிலிருந்து முஸ்லிம்கள் என்பதால் விடுதலைப் புலிகளினால் விரட்டப்பட்டது முதல் இன்று வரை 22 வருட காலம் அம்மக்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள முயற்சிக்காத நீங்கள் வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை தடுத்து நிறுத்தும் அநியாயத்தை ஏன் செய்கின்றீர்கள் என்றும் அவர் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 1994 ஆம் ஆண்டு முதல் பல்வேறு அமைப்புக்களால் வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தில் தமிழ் மக்களே அதிகமான நன்மையினை பெற்றுள்ளார்கள்.அவர்களுக்கு கிடைத்த வீடுகளின் முழுமையான எண்ணிக்கையினையும் முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள வீடுகளின் எண்ணிக்கையினையும் ஒப்பிட்டு பார்க்காமல் சில அரசியல் கட்சிகளின் பேச்சுக்கு காது கொடுத்து வடக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு துரோகத்தை இழைக்க நீங்கள் முற்பட்டுளளமையினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

 வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தற்போது தமது பிரதேசங்களில் மீள்குடியேறவருகின்ற போது அம்மக்களுக்கு எதிராக பல சக்திகள் செயற்பட்டுவருகின்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைக்காக பேசுபவர் என்று கூறும் நீங்கள் தனது சகோதர சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான போக்கை கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது எந்த விதத்தில் நியாயமாகும்.

 வவுனியா மாவட்டத்தில் 1994 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்ட வீடுகளின் விபரங்கள்  தங்களது பார்வைக்கு தருகின்றேன்.செட்டிக்குளம் பிரதே செயலகப் பிரிவில் தமிழ் மக்களுக்கு 2250 வீடுகளும்,முஸ்லிம்களுக்கு 366 வீடுகளும்,வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் தமிழர்களுக்கு 2500 வீடுகள்,முஸ்லிம்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை,வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் தமிழர்களுக்கு 2400 வீடுகள்,முஸ்லிம்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை,வவுனியா தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் சிங்களவர்களுக்கு 245 வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

 அதே போன்று இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு திட்டத்தில் மொத்தமாக 22 கிராமங்கள் தேவையின் அடிப்படையிலும்,பாதிப்புக்களின் அடிப்படையிலும் உள்வாங்கப்பட்டுள்ளது.அதில் 11 தமிழ் கிராமங்களும் 08 சிங்கள கிராமங்களும் ,03 முஸ்லிம் கிராமங்கள் மட்டுமே உள்ளது.இந்த வகையில் தமிர்களுக்கு 2463 வீடுகளும்,முஸ்லிம்களுக்கு 971 வீடுகளுமே வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

 தங்களது அரசியல் தேவைகளை கருத்தில் கொண்டு அப்பாவி தமிழ் முஸ்லிம் மக்களை மோதவிட்டு அதன் மூலம் இலாபம் அடையும் அரசியல்வாதிகளின் பட்டியலில் நீங்களும் இடம் பெற்றுள்ளீர்கள் என்பதை வேதனையுடன் தெரிவித்து கொள்வதுடன்.இவ்விடயம் குறித்த சந்தேகம் தங்களுக்கு ஏற்பட்டதும்,நேரடியாக வவுனியாவிற்கு வருகைத் தந்து எம்முடனும்,கலந்துரையாடியிருப்பீர்கள் என்றால் உண்மையை நாமும் தங்களுக்கு விளங்கபடுத்தியிருப்போம்.

 வன்னி மாவட்டத்தை பொறுத்த வரை முஸ்லிம்கள் ,தமழிர்கள் ,சிங்களவர்கள் என்ற பேதங்களின்றி சகலரும் சமமாக தமது உரிமைகளையும் தேவைகளையும் அனுபவித்து வருகின்றனர். கடந்த 30 வருடங்களால் நாங்கள் பட்ட பயங்கரவாதிகளின் நெருக்குவாரங்களால் பலதை இழந்துவிட்டோம்.எமது மாவட்ட தமிழ் பேசும் மக்கள் இப்போது தான் அச்சமற்ற ஒரு சூழலில் தமது வாழக்ககைியினை ஆரம்பித்துள்ளனர்.

 தலை நகரில் அரசியல் செய்யும் உங்களுக்கு எமது மக்களின் குடிசை வாழ்க்கையினை பற்றி தெரிந்து கொள்வதற்கு நியாயமில்லை என்பது யதார்த்தம். எனவே இவ்வாறான பிழையான தரவுகளின் அடிப்படையில் இந்திய வீடமைப்பு திட்டத்தை தடுத்து நிறுத்தி மேலும் மக்களை அவலத்துக்குள்ளாக்கும் வேலைகளை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதுடன்.இவ்விடயம் குறித்து எமது அமைப்பு  இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே கான்தா அவர்களுக்கும் தெளிவுபடுத்தும் நடவடிக்கையினை எடுத்துள்ளது என்றும்
அமைப்பின் தலைவரும் வவுனியா நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி மனோ கணேஷனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் இந்திய வீட்டுத்திட்டத்தில் நேர்மைத்தன்மை பேணப்பட்டுள்ளது- வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி. Reviewed by Admin on February 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.