மன்னார் உதயபுரம் கிராமத்தில் தையல் பயிற்சியை பூர்த்தி செய்த 16 யுவதிகளுக்கு தையல் மெசின்வழங்கி வைக்கப்பட்டது
மன்னார் உதயபுரம் கிராமத்தில் கடந்த 06 மாதம் இடம் பெற்ற தையல் பயிற்சி நெறியில் கலந்து கொண்டு குறித்த தையல் பயிற்சியை பூர்த்தி செய்த 16 யுவதிகளுக்கு தையல் மெசின் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (2-2-2013) மாலை 3 மணியளவில் உதயபுரம் கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் இடம் பெற்றது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் அவர்களினால் ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட 16 தையல் இயந்திரங்கள் குறித்த யுவதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம்,மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம்,மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,உபதலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் ,நகர சபை உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தனர்.
குறித்த உதயபுரம் கிராமமானது மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஒரு வறிய பின்தங்கிய கிராமமாகும்.
இங்கு சுமார் 150 குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகின்றனர்.
-இந்த மக்களுக்கு அரசாங்கத்தினால் எவ்வித அடிப்படை வசதிகளும் இது வரை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என அந்த மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர் வினோத்
மன்னார் உதயபுரம் கிராமத்தில் தையல் பயிற்சியை பூர்த்தி செய்த 16 யுவதிகளுக்கு தையல் மெசின்வழங்கி வைக்கப்பட்டது
Reviewed by NEWMANNAR
on
February 02, 2013
Rating:
No comments:
Post a Comment