அண்மைய செய்திகள்

recent
-

த.தே.கூ. பயங்கரவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறி வவுனியாவில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா மாவட்டத்தில் தமிழ் ,முஸ்லிம்,சிங்கள மக்களிடையே காணப்படும் இன உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாகவும்,அதன் மூலம் மீண்டும் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயல்வதாகவும் தெரிவித்து அதனை தோற்கடிக்க அனைத்து மக்களும் ஒன்றுபடுமாறு வவுனியா நகரத்தில்  இன்று வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம் பெற்றது.


 வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. வவுனியா பசார் வீதியிலிருந்தும்,வவுனியா மன்னார் வீதியிலிருந்தும் இரு வேறு பேரணிகள் ஆரம்பமானதுடன் இவ்விரு பேரணிகளும் வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையினை வந்தடைந்தன.

 பேரணியில் கலந்து கொண்ட மக்கள் தமது கைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பே அழிக்காதே,அழிக்காதே இன உறவை அழிக்கதே,மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்தாதே. . ,கடந்த 30 வருடம் நாம் பட்ட கஷ்டம் போதும்,எமக்கு கிடைக்கும் அபிவிருத்திகளை தடை செய்யாதே,ஜனாதிபதியின் ஆட்சியில் தான் நாம் நிம்மதியாக இருக்கின்றோம்.

அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பே தொலைக்காதே...எமக்கு எதுவும் உம்மால் செய்ய முடியாவிட்டால் மௌனமாக இரு புலிகளுக்கு அன்று வக்காலத்து வாங்கிய வன்னி தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்களே.இன்றும் அதனை செய்து எம்மை காட்டிக் கொடுக்காதே.. தமிழர்களாகிய எமக்கு கிடைத்துள்ளள்ள இந்திய வீட்டுத்திட்டத்தை இல்லாமல் ஆக்காதே,அமைச்சர் றிசாத் ஒரு நேர்மையான அரசியல்வாதி போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் காணப்பட்டதுடன்.கோஷங்களையும் எழுப்பினர்.




 இந்த ஆர்ப்பாட்ட பேரணியினால் சில மணி நேரம் வவுனியா மன்னார் வீதி,வவுனியா யாழப்பாணம் வீதிகளின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தன. பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமது மகஜர அரசாங்க அதிபரிடம் கையளிக்க பொலீஸார் அரசாங்க அதிபர் பணிமனைக்கு முன்பான நுழைவாயிலை மூடியிருந்தனர். பின்னர் ஒரு சிலர் மட்டும் அரசாங்க அதிபரை சந்தித்து தமது மகஜரை கையளிக்க சந்தரப்பம் வழங்கப்பட்டிருந்தன. அவர்கள் தமது நியாயமான கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அரசாங்க அதிபரிடம் கையளித்தாக அமைப்பின் தலைவர் அப்துல் பாரி தெரிவித்தார். 
த.தே.கூ. பயங்கரவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறி வவுனியாவில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் Reviewed by Admin on February 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.