மன்னாரில் வெள்ளநிவாரண பொருட்களை பதுக்கியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும்: சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை
மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண உலர் உணவுப் பொருட்கள் விநியோகத்தில் இடம் பெற்ற முறைகேடுகளை விசாரித்து சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கத் தயார் நிலையிலிருந்த உலர் உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த அதிகாரிகள் மீது உடன் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களைக் கோரியுள்ளார். இது தொடர்பில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அமைச்சருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மன்னாரில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்படவிருந்த அரிசி, கிழங்கு, வெங்காயம், பருப்பு மற்றும் கருவாடு என்பன பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்படவில்லை.
அதன்படி 140 மூடை அரிசி, 70 மூடை பருப்பு, ரின்மீன் 1200, சீனி 40மூடை ஆகியன மன்னார் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதே சமயம் பாவனைக்குதவாத பழுதடைந்த உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் கருவாடு என்பன இரண்டு உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டு வீசப்பட்ட சம்பவமும் அங்கு இடம் பெற்றுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 19ம் திகதி அன்று இடம் பெற்ற இச்சம்பவத்தினை மன்னார் மாவட்டப் பிரஜைகள் குழுவைச் சேர்ந்தோர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் களஞ்சியத்திற்கு நேரில் சென்று விசாரித்தறிந்தவேளை இப்பொருட்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பழுதடைந்தவை ட்ரக்டர்களில் எடுத்துச் செல்லப் பட்டு வீசப்பட்டிருந்ததையும் அவர்கள் கண்டறிந்தனர்.
மேலும், மக்களுக்கு வழங்கப்பட்ட உணவுப்பொருட்களின் அளவு, கூட்டுறவுச் சங்கத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டவை, பழுதடைந்த பொருட்களின் தொகை மற்றும் இவை உரிய காலத்திற்குள் வழங்கப்படாததன் காரணம் முதலானவற்றின் விபரங்களை வழங்குமாறு கோரியும் மன்னார், பிரதேச செயலாளரிற்கு பிரஜைகள் குழு கடிதம் அனுப்பியுள்ளனர். அத்துடன் பழுதடைந்து வீசப்பட்ட உலர் உணவுப்பொருட்கள் பற்றிய தகவலறிந்து மிகுதியாயிருந்தவற்றின் தரம் தொடர்பாக கூட்டுறவு விற்பனை நிலையம் சென்று பரிசோதித்த மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி ஆளுனராலும் உயர் அரச அதிகாரிகளினாலும் அச்சுறுத்தப்பட்டார்.
இச்செயற்பாடானது ஊழலை ஊக்குவிப்பதுடன் அதற்கு துணைபோவதாகவும் அமைந்து விடும். எதிர்காலத்தில் உண்மைகளைக் கண்டறிந்து ஊழல், மோசடிகளை களைய எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரமாட்டார்கள். வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு வேளை உணவிற்காக அவதிப்பட்ட வேளையில் அவர்களுக்கென வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் பதுக்கப்பட்டு பழுதடைந்த நிலையில் வீசப்பட்டதானது கண்டிக்கப்பட வேண்டிய பார தூரமான குற்றமாகும்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கையை அமைச்சு மேற்கொள்ள வேண்டும். அதன் மூலமே எதிர்காலத்தில் இவ்வாறானதொரு முறைகேடு இடம் பெறாமல் தடுக்கமுடியும். அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை பதுக்கி வைப்பதற்கு எதிராகவும் மற்றும் தங்களது இணைப்பாளர் ஒருவரும் இந்த முறைகேட்டில் தொடர்பு கொண்டுள்ளதையும் கருத்திலெடுத்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை சீராக விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கத் தயார் நிலையிலிருந்த உலர் உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த அதிகாரிகள் மீது உடன் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களைக் கோரியுள்ளார். இது தொடர்பில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அமைச்சருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மன்னாரில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்படவிருந்த அரிசி, கிழங்கு, வெங்காயம், பருப்பு மற்றும் கருவாடு என்பன பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்படவில்லை.
மேலும், மக்களுக்கு வழங்கப்பட்ட உணவுப்பொருட்களின் அளவு, கூட்டுறவுச் சங்கத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டவை, பழுதடைந்த பொருட்களின் தொகை மற்றும் இவை உரிய காலத்திற்குள் வழங்கப்படாததன் காரணம் முதலானவற்றின் விபரங்களை வழங்குமாறு கோரியும் மன்னார், பிரதேச செயலாளரிற்கு பிரஜைகள் குழு கடிதம் அனுப்பியுள்ளனர். அத்துடன் பழுதடைந்து வீசப்பட்ட உலர் உணவுப்பொருட்கள் பற்றிய தகவலறிந்து மிகுதியாயிருந்தவற்றின் தரம் தொடர்பாக கூட்டுறவு விற்பனை நிலையம் சென்று பரிசோதித்த மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி ஆளுனராலும் உயர் அரச அதிகாரிகளினாலும் அச்சுறுத்தப்பட்டார்.
இச்செயற்பாடானது ஊழலை ஊக்குவிப்பதுடன் அதற்கு துணைபோவதாகவும் அமைந்து விடும். எதிர்காலத்தில் உண்மைகளைக் கண்டறிந்து ஊழல், மோசடிகளை களைய எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரமாட்டார்கள். வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு வேளை உணவிற்காக அவதிப்பட்ட வேளையில் அவர்களுக்கென வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் பதுக்கப்பட்டு பழுதடைந்த நிலையில் வீசப்பட்டதானது கண்டிக்கப்பட வேண்டிய பார தூரமான குற்றமாகும்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கையை அமைச்சு மேற்கொள்ள வேண்டும். அதன் மூலமே எதிர்காலத்தில் இவ்வாறானதொரு முறைகேடு இடம் பெறாமல் தடுக்கமுடியும். அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை பதுக்கி வைப்பதற்கு எதிராகவும் மற்றும் தங்களது இணைப்பாளர் ஒருவரும் இந்த முறைகேட்டில் தொடர்பு கொண்டுள்ளதையும் கருத்திலெடுத்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை சீராக விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் வெள்ளநிவாரண பொருட்களை பதுக்கியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும்: சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை
Reviewed by Admin
on
February 01, 2013
Rating:

No comments:
Post a Comment