அடம்பனிலும் நெடுங்கேணியிலும் குடிநீர் விநியோகத் திட்டங்கள்!
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலின் அடிப் படையில் ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த இரு குடிநீர்த் தாங்கிகள், எதிர்வரும் மார்ச் மாதம் மக்களிடம் கையளிக்கப்படும் என்று அமைச்சின் திட்ட அதிகாரி எஸ். கே. லியனகே தெரிவித்தார்.
வடக்கு புனர்வாழ்வு திட்டத்தின் நிதியொதுக்கீட்டைக் கொண்டு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நிர்மாணித்திருக்கும் இவ்விரு குடிநீர்த் திட்டங்களின் மூலம் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலுள்ள 16 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 12 ஆயிரத்து 594 குடும்பங்கள் சுத்தமான குடி நீரைப் பெற்றுக்கொள்ளும் அவர் கூறினார். வட மாகாண மக்கள் முகம் கொடுத்து வரும் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினையை வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் தீர்த்து வைக்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த இரு திட்டங்களிலும் 20 இலட்சம் லீற்றர் குடிநீரைச் சேமித்து வைக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
மூன்று தசாப்த காலம் நீடித்த யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்திருந்த மக்கள் யுத்தம் முடிவுற்றதோடு மீண்டும் தம் சொந்த இடங்களில் மீளக்குடியேறியுள்ளனர். அவர்கள் முகம் கொடுத்துவரும் குடிநீர்ப் பற்றாக்குறையைத் தீர்த்து வைப்பதற்கே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடம்பன் குடிநீர்த் திட்டம் மூலம் தடுக்கண்டால், அடம்பன், பாப்பாமோட்டை, மாளிகைத்திடல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களும் நெருங்கேணி குடிநீர்த் திட்டம் மூலம் கட்டிக்குளம், நெடுஞ்கேணி தெற்கு, வடக்கு, ஒலுமடு, மாமடு, குழவிசுட்டான், மாராய், இலுப்பை ஆகிய கிராமங்களில் வாழும் மக்களும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வர் எனவும் அவர் கூறினார்.
அடம்பனிலும் நெடுங்கேணியிலும் குடிநீர் விநியோகத் திட்டங்கள்!
Reviewed by Admin
on
February 24, 2013
Rating:

No comments:
Post a Comment