வட மாகாணத்தில் உள்ள 23 பாடசாலைகளுக்கு அவுஸ்ரேலியா 100 கோடி ரூபா நிதி உதவி!
யுத்தம் காரணமாக பாரிய சேதத்திற்கு உள்ளான கிளிநொச்சி பாடசாலைகளை மீள கட்டி எழுப்புவதில், அவுஸ்திரேலிய அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் போது முற்றாக அழிந்து போன கிளிநொச்சி மகா வித்தியாலயம் தற்போது மீள கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தற்போது அந்த பாடசாலையில் புதிய 24 வகுப்பறைகள், திறந்த வெளி அரங்கம் ஒன்று மற்றும் கேட்போர் கூடம் என்பனவற்றை உள்ளடக்கிய பாடசாலை தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் நிதி உதவி மூலம் பாடசாலை கட்டடங்களை நிர்மாணிப்பதுடன் மட்டும் கட்டுப்படுத்தப்பட மாட்டாது என ஐக்கிய நாடுகளுக்கான சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சி வழங்குவது குறித்தும் அவுஸ்திரேலிய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வட மாகாணத்தில் நிறைவு செய்யப்பட்ட இரண்டு குடிநீர் திட்டங்கள் அடுத்த மாதம் முதல் செயல்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள அடம்பன் மற்றும் வவுனியா மாவட்டத்தில் உள்ள நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களில் இந்த திட்டங்கள் செயல்படவுள்ளன. இந்த திட்டங்கள் மூலம் குறிப்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 594 குடும்பங்கள் தங்கள் குடிநீர் தேவைகளைப் பெற முடியும் என, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இயக்குனர் எஸ்.கே. லியனகே தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் உள்ள 23 பாடசாலைகளுக்கு அவுஸ்ரேலியா 100 கோடி ரூபா நிதி உதவி!
Reviewed by Admin
on
February 26, 2013
Rating:

No comments:
Post a Comment