அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் எதிர்வரும் 21 ஆம் திகதி மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.


மன்னார் மாவட்ட மீனவர்கள் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து எதிர்வரும் 21 ஆம் திகதி வியாழக்கிழமை மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாம தலைவர் எம்.எம்.ஆலம் தெரிவித்தார்.

மீனவ சங்கங்களின் பிரதி நிதிகளுக்கு இடையில் கடந்த 17 ஆம் திகதி இடம் பெற்ற விசேட சந்திப்பின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாகவே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

-குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இந்திய மற்றும் உள்ளுர் இழுவைப்படகுகளின் தொழில் முறைகள் முற்றாக நிறுத்தப்படுதல்,கடற்படையினரின் பாஸ் நடைமுறை நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக கடற்தொழிலாளர் அடையாள அட்டை மாத்திரம் வழங்கப்பட வேண்டும்,சிலின்டர் மூலம் கரையோரத்தில் தொழில் செய்வதை நிறுத்தி ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மாத்திரம் தொழில் செய்ய அனுமதித்தல் போன்ற மூன்று முக்கி கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டம் இடம் பெறவுள்ளது.

-எதிர் வரும் 21 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணியளவில் மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச காரியலயத்திற்கு முன் குறித்த குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆராம்பமாகி ஊர்வலமாக மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடையவுள்ளது.

இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளதாக மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாம தலைவர் எம்.எம்.ஆலம் மேலும் தெரிவித்தார்.

(மன்னார் நிருபர்) 
மன்னாரில் எதிர்வரும் 21 ஆம் திகதி மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம். Reviewed by Admin on February 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.