அண்மைய செய்திகள்

recent
-

முஸ்லிம்களை வலியச் சண்டைக்கு அழைத்து அவர்களது பொருளாதாரத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கை-மீலாதுன் நபி விழாவில் றிசாத்


முஸ்லிம்களை வலியச் சண்டைக்கு அழைத்து அவர்களது பொருளாதாரத்தை அழித்தொழிக்கும் படு மோசமான செயலை சிலர் செய்துவருகின்றனர். இது இவர்களது கனவாகும் என்று கூறிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் இகைத்தொழில் வணிகத் துறை அமைசச்ருமான றிசாத் பதியுதீன் முஸ்லிம்கள் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்வதுடன், பொறுமை காக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.



மதவாச்சி மற்றும் மன்னார் புதுக்குடியிறுப்பு பிரதேசங்களில்   நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற மீலாதுன் நபி விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறுகையில்-

இந்த கால கட்டமானது முஸ்லிம்களுக்கு சோதனை மிகுந்ததாகவே காணப்படுகின்றது.பெருமான்மை இனத்திலுள்ள சிலர் முஸ்லிம்களின் சொத்துக்களையும், வர்த்தகங்களையும் முடக்கவே முனைகின்றனர். குறிப்பாக மதவாச்சி போன்ற பிரதேசங்களில் வாழும் சிங்கள-முஸ்லிம் மக்களை பிரித்து அவர்களை மோத வைத்து, அதனுாடாக இன கலவரமொன்றை ஏற்படுத்த திட்டங்களை தீட்டுகின்றனர்.

இலங்கை முஸ்லிம்கள் இன ஒற்றுமை, நாட்டு பற்றுள்ளவர்களாக பிரிவினை வாதத்தை விரும்பாத ஆயுதக் கலாசாரத்தில் நம்பிக்கையற்றவர்களாகத் தான் இருந்து வருகின்றார்கள். இந்த நிலையினை பயன்படுத்திக் கொண்ட மதவாத குழுக்கள் மோதல் நிலையினை ஏற்படுத்த சிந்திக்கின்றனர். அதன் வெளிப்பாடாகத் தான் அநுராதபுரத்தில் பள்ளி வாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமாகும். பாதுாகப்பு தரப்பினர் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கையினால் பல சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளதை நாம் விளங்கி வைத்திருக்க வேண்டும்.

இதனது பிரதி பலனாக அவர்கள் எதிர் பார்த்தது முஸ்லிம்களை சீண்டி அழிவுகளை ஏற்படுத்தலாம் என்று , ஆனால் அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை மேற்கொண்ட நடவடிக்கையினால் எவ்வித அசம்பாவிதங்களும் எவருக்கும் இடம் பெறவில்லை.

அப்படி மிகவும் பொறுமையாக நாட்டினதும், மக்களினதும் நலன் கருதி செயற்படும் அமைப்பை விமர்சிப்பதற்கும், அதற்கு எதிரான சில விஷமப் பிரசாரங்களை முன்னெடுக்கவும் அனுமதிக்க முடியாது, முஸ்லிம்கள் இவ்விடயத்தில் மிகவும் நிதானமாகவும், ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது தான் காலத்தின் தேவையாகும்.



முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இன ரீதியான தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி, மற்றும் அமைச்சர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். இதற்கு சமாந்தரமாக வடக்கிலு் மதவாத, இனவாதி சக்திகள் வடக்கில் வாழந்த முஸ்லிம்கள் மீள்குடியேற வருகின்ற போது அதனை தடுத்து நிறுத்த செயற்படுகின்றது. அவற்றுக்கு இப்பி்ரதேச மக்கள் இடம் கொடுக்க கூடாது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.

 (மன்னார் நிருபர் வினோத் )
முஸ்லிம்களை வலியச் சண்டைக்கு அழைத்து அவர்களது பொருளாதாரத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கை-மீலாதுன் நபி விழாவில் றிசாத் Reviewed by Admin on February 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.