மன்னாரில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 18 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சியின் காரணங்களினால் மன்னார் மாவட்டத்தில் விவசாய நடவடிக்கை அழிவடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எதிர் நோக்கியுள்ள நஸ்டங்களை ஈடுசெய்யும் முகமாக அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க பாதிக்கப்பட்ட விவசாயிகளுடனான அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் உயிலங்குளம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம் பெற்ற போது விவசாயிகளினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், விவசாய அமைப்புக்களின் தலைவர்,செயலாளர்,பிரதான வாய்க்கால் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,மற்றும் விவசாயிகள் என பல நூற்றுக்கணக்காணவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் கருத்துத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,,,,,
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்தது.
இதன் போது பாதீக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய முறையில் நிவாரணம் வழங்கப்படவில்லை. விவசாயிகள் வங்கியில் பெற்றுக்கொண்ட கடணை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
நகைகளை வங்கியில் வைத்து பணத்தை பெற்றவர்கள் திருப்பி நகைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
ஆனால் அசாங்கத்தினால் விவசாயிகளுக்கு அமுல்படுத்தப்பட்ட சகல திட்டங்களும் தென்பகுதி விவசாயிகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால் வடமாகாணத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அமுல்படுத்தவில்லை.இதனால் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்தும் தற்போது பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றதோடு விவசாய குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர் நோக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அரசாங்கத்தினால் வடமாகாண விவசாயிகள் சகல விடையங்களிலும் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதை கண்டித்து எதிர் வரும் 18 ஆம் திகதி அணைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து மன்னார் உயிலங்குளம் பகுதியில் உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்து அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிப்பது என தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர் வினோத் )
மன்னாரில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 18 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம்.
Reviewed by Admin
on
February 09, 2013
Rating:
No comments:
Post a Comment